தாயின்றி நீ இல்லை

தாயின்றி நீ இல்லை
............................................
பாசம் பரிமாறும் உன் விழிகளுக்கு ஈடாய்
ஏதுமிங்கில்லை தாயே
என் அழுகுரல் உன் காதுகளை சேர்ந்திருக்க வாய்ப்பில்லை
தடைச்சுவராய் போன
கடல் அலை ஓசைகள் தாண்டி
எம்தேசத்து விவசாயத்தை
எம் தேசத்து மீன்பிடியை
எம் தேசத்து குடிசைத்தொழிலை
சிறுமைப்படுத்தியவர்களே...
கனவுகளை சுமந்துவரும் பொதிகளுக்குள்
வலிகளை மட்டுமே எடுத்துச்செல்கிறான்
ஏழை தொழிலாளி
வியர்வைத்துளிகளுக்கான சன்மானம் இன்னும் வழங்கப்படவில்லை
என் காதலியே
தபால் தலையோடு வரும் உன் வாழ்த்துமடலில்
காதலைச்சுவாசிக்க முடிவதில்லை
அதில் படர்ந்திருக்கும் வலிகளைத்தாண்டி
வண்ணம் பூசிய கனவுகள் இனியும் வேண்டாம்
அதில் நிஜங்களை காணமுடிவதில்லை
சுயத்தை தொலைப்பதை தவிர

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (3-May-15, 12:58 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 305

மேலே