சிறு துளி

ஓரங்கட்ட நினைக்கிற ஒவ்வாருவரையும்
ஓரங்கட்டியே வைத்திருக்கிறது
ஒரு நல்ல புத்தகம்!!.......

வெய்யிலின் கொடுமை தாங்காமல்
உடம்பை விட்டு ரோசத்தோடு
வெளியேறுகிறது?!..... (வியர்வை)

மிதிபட்டாலும்
எருதுகளின் புனிதக் கால்களால் மட்டுமே
மிதிபட வேண்டும்?!.... (வயல்வெளி)

தான் இறந்து போன துக்கத்தை
மாரடித்து மறக்கடிக்கிறது?!.... (மத்தளம்)

கோபத்தைக் கூறுபோட நினைக்கும்போதெல்லாம்
பிறவி குணம் என்னும் பித்து பிடித்து விடுகிறது?!......

நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
வீட்டுக்கு ஒரு மரம் நடுதல் மட்டுமே?!.......

பரிகாரத்தில் பண மழை?!......
உண்மையாய் உழைப்பவன்
பெய்யெனப் பெய்யும் மழை!!.....

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (3-May-15, 6:09 pm)
Tanglish : siru thuli
பார்வை : 178

மேலே