உள்ளத்தோடு

ஆழ்கடலில் அமிழ்ந்து போன நிலவொளியை
கரங்கள் பற்றி உளம் நனைக்க
தேகம் அருந்திய பனித்துளி துகள்களாக
விழிகளின் மேல் அமர
இராவோடு இரை தேடி அலையும் பட்சியாய்
கன்னங்களில் தனிமையை வித்திட்டு
வேதங்களை உறையச் செய்யும் பார்வைகளை மட்டும்
சிறு மைத்துளி கவிதைகளாக மண்டியிட செய்ய
தமிழ் அமுதோடு விழி பேசும் மெளன சுகம்
மலை உச்சியின் பனியினை உருக்கும் கதிரினைப் போல
வாசம் வீச வாடைக்காற்று மட்டும் மனதினை வாட்டி
நொந்து போன இதயத்தில் காய்ந்த சருகாக வீழ்கிறதே
அந்தியுஞ் சந்தியும் ஆறுதலாக உறவாட
அரைகுறைக் கனவினில் விழிக்கிறதே
வயிற்றைக் கட்டிய வாயைப் போல நினைவுகள்