மெதுவாக போ- Translation of Aahista Chal Jindgi by Anikesh Wats

A poem by Anikesh Wats found in Poemhunter :

“Ahista chal zindagi, abhi kai karz chukana baaki hai
Kuch dard mitana baaki hai, kuch farz nibhana baaki hai
Raftaar mein tere chalne se kuchh rooth gaye, kuch chhut gaye
Roothon ko manana baaki hai, roton ko hasana baaki hai
Kuch hasraatein abhi adhuri hain, kuch kaam bhi aur zaruri hai
Khwahishen jo ghut gayi is dil mein, unko dafnana baaki hai
Kuch rishte ban kar toot gaye, kuch judte judte chhut gaye
Un toote-chhute rishton ke zakhmon ko mitana baaki hai
Tu aagey chal main aata hoon, kya chhod tujhe ji paunga?
Is saanson par haq hai jinka, unko samjhaana baaki hai
Ahista chal zindagi, abhi kai karz chukana baaki hai”

*****************************************************************************************************
** பொருள் நிறைந்த இப்பாடலை பரிந்துரைத்தவர் நண்பர் திரு.ராஜன்
** மொழிபெயர்த்துள்ளேன் , நான் நண்பர்கள் அறிவதற்கு , பின்வருமாறு :
******************************************************************************************************

வேகமாய் ஓடும் வாழ்க்கையே..
சற்றே பொறுமையாய் போ..!

நான்..
அடைக்க வேண்டிய கடன்கள் அதிகமுண்டு..
அழிக்க வேண்டிய வலிகள் கொஞ்சம் உண்டு..
முடிக்க வேண்டிய கடமைகள் இன்னும் உண்டு.. .!

என் வாழ்வே..! .
நீ கடந்து போகும் ..வேகம்..
சிலருக்கு கோபத்தை கொடுக்கிறது
சிலரை விரட்டியே விடுகிறது ..

இங்கே..

சஞ்சலங்கள் அடைந்தோர் பலர் .. சாந்தி பெறவும் ..
கலங்குபவர்கள் கண்ணீர் துடைக்கப் படவும் வேண்டியுள்ளது !

சில ஆவல்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளன..
சில வேலைகள் நிறைவு செய்யப்பட காத்திருக்கின்றன ..

என் மனச்சிறையில் அடைபட்டிருக்கும் சில ஆசைகள் கூட ...
இன்னும் நிரந்தரமாய் புதைக்கப் பட வேண்டியுள்ளது !

மலர்ந்த சில உறவுகள் மறைந்து போயின..மலர்ந்த பின்னர் !
மற்றும் சில ..மலர்வதற்கு முன்னரே கருகிப் போயின..!
உடைந்து போன ..மருந்து போன ..கருகிய அந்த உறவுகள்..
ஏற்படுத்திவிட்ட காயங்கள் நிறையவே ..
அவை ஆறிட எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்!

அதனால்தான் ..வாழ்க்கையே.. !

நீ மெல்ல நகர்ந்து போய்க் கொண்டிரு..
தொடர்ந்து வருகிறேன் நான்.. ஆனால்...
ஜீவனற்று இருக்க முடியுமோ என்னால்?

என் ஒவ்வொரு மூச்சையும்..
தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ..என்னைப் படைத்தவனோடு
செய்து கொள்ள வேண்டிய சமரசங்கள் சில எனக்கு உண்டு ..

வாழ்க்கையே.. அது வரை..நீ.
கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்திடு..
அடைத்திட வேண்டிய கடன்கள்
எனக்கு நிறையவே இருப்பதால்..!

எழுதியவர் : கருணா (6-May-15, 1:26 pm)
பார்வை : 250

மேலே