நண்பனே உனக்காய்

நண்பனே உனக்காய்
உனக்காய் ஒரு கவிதை
வார்த்தைகள் தீருமே
உன் நட்ப்பை
நான் எழுத
தொடங்கிய எதுவும்
முடிந்தே போகும் ஒரு நாள்
முடிவிலா சொந்தம்
நம் சொந்தம்
எனக்கான ரகசியம்
நீ சுமந்து திறிகிறாய்
என்னை சோகம்
சூழும் வேளை
ஆறுதல் படுத்துகிறாய்
என் சந்தோசங்களில்
நீ உச்சிமகிழ்கிறாய்
என் காதலுக்கு
காவலன் நீ தான்
உன் சொல் கேட்ட பின்னே
சம்மதம் சொன்னார்கள்
வீட்டில் எல்லோரும்
காக்க கடி கடிக்கையிலே
தொடங்குன நம் பந்தம்
வாய்க்கரிசி போட்டாலும்
முடிய போறதில்ல
மாப்ளை
பங்காளி
மச்சான்
என்னனு நான் சொன்னாலும்
திரும்புற ஒரு ஜீவன்
என் சொந்தம் எல்லாம்
உன் சொந்தம் தான்
கடவுள் இருக்க முடியாதுன்னு
அம்மாவை படைச்சாரு
அம்மா துணை
பல நேரம் இருக்காதுன்னு
அவர் உன்னை படைச்சாரு
ரத்த சொந்தம்
நமக்கு இல்லை
ஆனாலும்
நீ
என் உறவு தான்
மத்த சொந்தம்
விட்ட போதும்
விடல உன் நட்பு தான்
நண்பனே
உன்ன பத்தி
எப்படி உலகத்துக்கு
சொல்வேன்
என் உலகம் நீதான்னு ....
பாண்டிய இளவல் (மது. க)