மன நிழல்
இயற்கையும் செயற்கையும் உன் வனப்பில் போட்டி போடும்
மலர்களும் மகரந்தமும் உன் கூந்தலில் தோட்டம் போடும்
நட்சத்திர கூட்டங்கள் உன் புன்சிரிப்பில் தோற்று சிதறி ஓடும்
உன் வியர்வை துளிகளில் என் ஜீவன் முகம் பார்த்து வாழும்
உன்னுடனான என் பரிமாற்றங்களில் என் ஆண்மை கூடும்
காதல் சூழ்ந்த உன் மன நிழலில் ஆசுவாசம் தேடும் தேடும்