கடிதம் வந்து விட்டது- Translation of Chithee aayee hai

Hindi film : Naam
Song: chithee aayee hai
By Pankaj Udhaas (Gazal song )
****************************************
அன்பு சொந்தங்கள் அங்கே
கடல் தாண்டி நான் இங்கே
கண்ணீருடன்..

எனக்கு வந்தது ..கடிதம் ஒன்று
என் அன்புத் தந்தையிடம் இருந்து..
..தாய் மண்ணின் வாசத்துடன்
வந்திருந்திருக்கும் கடிதம் இது..!

உறையின் மேல் என் பெயர் இருந்தது..
உள்ளே .. பாசம் நிறைந்திருந்தது ..
அன்புத் தந்தை அதில் எழுதியிருந்தது :

பிழைப்புக்கு அயல்நாடு சென்ற பலர்
சொந்த மண் மறப்பார்..
பொருள் ஈட்டுதற்கே சுகம் துறப்பார்..
ஏழு கடல் தாண்டி.இருக்கின்றாய் அங்கே..
எங்கள் உயிர்களும் இருப்பது உன்னுடனே ..
ரத்த பந்தங்கள் ..சொந்தங்கள் எல்லாமே ..
..
எங்கள் விழிகளில் நீ விட்டு சென்ற கண்ணீர்
மட்டும்தான் இருக்கிறது எங்களோடு..
உணவும் குறைவாக ..உறக்கமும் சிறிதாக
கண்ணீர் மட்டும் நிறைவாக..கடத்துகிறோம்
நாட்களையே..அழுதபடி உன் நினைவில்..!

நீ இல்லாமல்.. வீதிகள் இங்கே வெறிச்சோட..
தோட்டத்து மலர்களும் முள்ளாக..தோன்றுதைய்யா..
வந்து செல்லும் வசந்தம் ..நான் இருக்கிறேன்
உங்களுக்கு சொந்தம்..என்று சொல்லிப் போகுதப்பா !
எங்களை நீ மறந்தாலும் ..நாங்கள் உன்னை மறப்போமா ..?

நீ இல்லாத தீபாவளியில் தீபங்கள் எரிவதில்லை ..
இங்கே எரிவதெல்லாம்.. எங்கள் உள்ளங்களே..!
நீ இல்லாத வண்ண பண்டிகையில் ..தெளிப்பதற்கு
நீர் கூட இல்லாது ..வற்றிப் போன குளங்கள் இங்கே!
நம் இல்லம் கூட மயானம் போல் இருக்குதப்பா..!

அறுவடைக்காலம் முடிந்து வந்திருப்பது பண்டிகைகள் இங்கே
ஆனாலும் அத்தனையும் காத்திருப்பது.. உனக்காகத்தானே !
முன்பெல்லாம் உன் முகம் காண்போம் உன் கடிதங்களில் ..
ஏன் அதனை மறைக்கின்றாய்..இப்போதெல்லாம் ?
இந்த வேதனை விளையாட்டு போதுமப்பா..!

மணமுடித்து போகின்ற உன் தங்கை ஏங்குகிறாள் உன் முகம் காண ..
என்னைப் பற்றி ஏதுமில்லை..நான் உன் தந்தைதானே ..
உன் தாயோ அப்படியில்லை..எப்போதும் உனையெண்ணி
கண்ணீரில் தினம் கரைகின்றாள்..!
வேலைக்கு செல்கின்ற உன் மனைவி முகம் காண முடியவில்லை
விதவையினைப் பார்ப்பது போல் இருக்கின்றது ..வேண்டாமப்பா..

நீ ஈட்டியது போதும்..இங்கே வந்து விடு..
அது உன் வீட்டை விட்டு விரட்டியது..
நாட்டை விட்டும் துரத்தியது....
உன் கூண்டை விட்டு வெளியேறு..
வீட்டுக்கே வந்து விடு..
இளமை இருக்கும் போதே..
இங்கே வந்து விடு,..இங்கு
எல்லோரும் உன் நினைவில்!

மூலக் கவிதை
Chitthi Aai Hai Lyrics

Chitthi aaii hai aai hai chitthi aai hai
Chitthi hai vatan se chitthi aayi hai
Bade dinon ke baad, ham bevatanon ko yaad
Vatan kii mitti aai hai, chitthi aai hai

Upar mera naam likha hain, andar ye paigaam likhaa hain
O parades ko jaane vaale, laut ke phir na aane vaale
Saat samundar paar gayaa tu, hamako zindaa maar gayaa tu
Khoon ke rishte tod gayaa tu, aankh mein aansuu chhod gayaa tu
Kam khaate hain kam sote hain, bahut zyaada ham rote hain
Chitthi aaii hai aaii hai chitthi aai hai...

Sooni ho gain shahar ki galiyaan, kaante ban gain baag ki kaliyaan
Kahate hain saavan ke jhuule, bhool gayaa tu ham nahiin bhoole

Tere bin jab aai diwali, deep nahin dil jale hain khaali
Tere bin jab aai holi, pichakaari se chhuuti goli
Peepal soona panaghat soonaa ghar shamashaan ka bana namoona
Fasal kati aaii baisaakhi, teraa aanaa rah gayaa baaki
Chitthi aaii hai aaii hai chitthi aai hai...

Pahale jab tuu kat likhataa tha
Kaagaz mein chehara dikhata tha
Band hua ye mel bhi ab to, khatam hua ye khel bhi ab to
Doli men jab baithi bahana, rasta dekh rahe the naina
main to baap hoon mera kya hai, terii maa ka haal bura hai
Teri beevi karati hai seva, soorat se lagati hain beva
Tune paisa bahut kamaaya, is paise ne desh chhudaaya
Panchhii pinjaraa tod ke aajaa, desh paraayaa chhod ke aaja
Aajaa umar bahut hai chhoti, apane ghar men bhi hain roti
Chitthi aai hai aaii hai chitthi aai hai ...

எழுதியவர் : கருணா (6-May-15, 9:40 pm)
பார்வை : 443

மேலே