சம்மதம்
என் வீட்டின்
முற்றத்தில்
உரிமையாக வந்து
நடைபயிலும்
அடைக்கலாங் குருவி!
என் தோட்டத்தில்
மலர்ந்து விட்டு
எனக்காக
காத்திருக்கின்ற
ஒற்றை ரோஜா.!
என் வீதியில்
சாமி ஊர்வலம்
என்னைத்தேடி
பரபரக்கும்
இரு விழிகள் !
மாட வீதி
தேர் நிறுத்தம்
எனக்குள்
ஏற்படுத்திய
இனிய உணர்வு..!
இன்னும் இரண்டு
வருடம் பொறு
என்ற
தந்தையின்
அருள் வாக்கு..!
அவள் வீட்டிலும்
சம்மதம் தானாம்
கேட்டவுடன்
புதிதாய்
மலர்ந்த பூக்கள்!
முற்றத்து குருவி
இன்னும் அருகில்
வந்து
சிநேகம்
காட்டி சிரித்தது !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
