எழுது கோல்,

பச்சை,மஞ்சை,சிவப்பு,கருப்பு,ஊதா
கலர் காரி

மத்தியில் உதிக்கும் எண்ணத்தை
தலையாட்டி தலையாட்டி செதுக்கும் தந்திரக்காரி

கத்தி முள்ளால் காகிதத்தை முத்தம் போடும் போதே
நம்மை முனர வைக்கும் மந்திரக்காரி

என்னவள் கடிதம் தீட்ட சிந்திக்கும் தருவாயில்
அவள் வாயில் குடிபுகும் அதிஷ்டக்காரி

பந்து கால் கொண்டு பரதம் ஆடி
வண்ண படம் தீட்டும் திறமைக்காரி

கையெழுத்து மூலம் தலையெழுத்தை
நிர்ணயம் செய்யும் தலைமைக்காரி

காகிதங்களுடன் கொஞ்சி கோளாவி கோடி
கவிதைகள் கொட்டும் காதல் காரி

எழுத்து வடிவம் பெற்ற எல்லா மொழியும்
அறிந்த அறிவுக்காரி

உவமையின் உருவக்காரி
உலகின் கூர்மைக்காரி

வள்ளுவனின் ஏட்டுக்காரி
பாரதியின் கோவக்காரி
கலைஞனின் காவியக்காரி
வைரமுத்துவின் பாட்டுக்காரி

நீதியரசர்களின் கற்புக்காரி
ஆசிரியர்களின் கற்பனைக்காரி

எழுதுபவர்களுக்கு எந்திரக்காரி
படிப்பவர்களுக்கு பாசக்காரி

மொத்தத்தில்
எழுத,படிக்க தெரிந்த அனைவர்களுக்கும்
சொந்தக்காரி...............,,

எழுதியவர் : கிருஷ்ணா (7-May-15, 2:48 pm)
பார்வை : 396

மேலே