இனிப்போடு இனிதமிழ்
இனிப்போடு இனிதமிழ்..
நித்திரை நித்திரை...
நீண்ட நித்திரை...
நீ நீண்டு தூங்கிய நித்திரை போதும்...
தமிழா....தமிழா...
சித்தரை சித்தரை
சிங்காரச் சித்திரை..
சிரிச்சு வருது...
சின்னச் சின்னப் பூப் பறிச்சு வருது...
பிள்ளை அழுகுது..
பிள்ளை அழுகுது...
மொழிப் பசியால் அங்கு பிள்ளை அழுகுது...
தட்டி எழுப்புங்க...
கை கொட்டி எழுப்புங்க...
தமிழ்த் தாயவளைத் தட்டி எழுப்புங்க...
தேனைக் குடுக்கச் சொல் ...
தமிழ்த் தேனைக் குடுக்கச் சொல்.....
பசியில் வாடிய பாக்கள்
ருசியைத் தேடிய நாட்கள்...
விலகட்டும் ...திரை விலகட்டும் ..
கரை கலையட்டும்...
நிறை நிறையட்டும்..
மாண்டது இருள்...
மலர்ந்தது தமிழ்....
பூவுலகு முழுதும்
புசிக்கட்டும் இனித் தமிழை...
ருசிக்கட்டும் இனித் தமிழை....
இனித் தமிழை.....இனிதமிழை...
புத்தாண்டோடு பூக்கட்டும் தமிழும்....
சுவையுங்கள்....
இனிப்புடன் இனிதமிழையும்...
மலரட்டும் வாழ்வோடு
வயல்வெளித் தமிழும்....
~தமிழ்நேசன்(இரா .யோகேஷ் பிரபு )
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
