தோற்பதிலும் சுகம்

மின்னலும் தோற்றுப்போகும்
உனது மின்சாரப்பார்வையில்
தென்றலும் தோற்றுப்போகும்
உனது தெம்மாங்குச் சுவாசத்தால்......
தோகை மயிலும் தோற்றுப்போகும்
உன் கை ரேகை அழகி முன்னே .....
வெள்ளிக் ‪கின்னமும்‬ வெளுத்துப்போகும்......
உன் ‪‎கன்னத்தின்‬ அழகின் முன்னே
என் ‪எண்ணத்தைப்‬ போலவே......
நானும் தோற்றுப்போனேன்
உன் நந்தவனச் சிரிப்பினால் ..........
தோற்பதிலும் ஓர் சுகம் தான்
தோற்பது உன்னிடம் என்றால்....

எழுதியவர் : தமிழ்நேசன் (யோகேஷ் பிரபு இ (7-May-15, 11:30 pm)
பார்வை : 104

மேலே