படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - கவிதைத் தலைப்பு
புத்துயிர் நீ கொள்வாயோ!
இரைதேடி சென்ற பெற்றோர்
பாசம் நேசம் காட்டாமலே
இரையாகி போனாரோ பொருளுக்கு
பாட்டன் பாட்டி எல்லாம்
பரஸ்பர பொருள் சுமையினாலே
முதியோ ரில்லம் புகுந்தனரோ!!
வினாக்கள் நெஞ்சில் விளைந்ததுவோ!!
நமது பெண்டிர் நிலைமைகண்டு
அண்ணன் ஒருவன் இருந்திருந்தால்
அரவணைத்து சென்றிருப்பான்
தங்கை ஒருத்தி இருந்திருந்தால்
தழுவி துன்பம் போக்கிருப்பாள்
பாசம் நேசம் அன்பெல்லாம்
பொருளுக்கு பின்னே போனதனால்
ஒன்றிற்கு மேல் வைத்திருந்தால்
ஓர் பெரிய குற்றமன்றோ!!
குழந்தையோ குமரியோ கிழவியோ
காமத்தீ பாய்ச்சும் காளை-கூட்டம்
கீழ்மதி கண்டு கவலை-கொண்டாயோ!!
காலம் நேரம் கூடிவரும்
கன்னி நிலை மாறிவிடும்!!
கொண்டிருக்கும் துன்ப மெல்லாம்
கதிர்கண்ட பனி ஆகிவிடும்!!
பெண்ணின் நகை காண்பதாலே
புவியில் ஈர்ப்பு உள்ளதுவே!
பிறக்காத கண்ணீரை போக்கிவிட்டு
புத்துயிர் நீ கொள்வாயோ!