படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு..!!!


கோபுர மாளிகையின் மஞ்சள் நதிக்கரையில்
பல ஜோடி நினைவுகள் கொஞ்சிக்
குலாவித் திரிந்தன.
மோதலா, ஊடலா நாமறியோம்.
தப்பித் தவறி சிதறிய நினைவொன்று
நதியைக் கடந்து கரை சேர்ந்து
எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்,
அதன் ஜோடி நினைவுடன் கைகோர்க்க...!!!

எழுதியவர் : தர்மராஜ் (8-May-15, 11:08 pm)
பார்வை : 125

மேலே