படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை பேசாத ஓவியம்
பேசாத ஓவியம்...
பிடிலின் பிடியோடு தனித்திரும் பாவையை,
பார்வையின் அர்த்தம் புரியாமல்
மௌனத்தை மொழிபெயற்கும் கவியும்
மொழியற்று ஊமையவான் , உன்
தனிமையின் பாவனை புரியாமல் ...
காத்திருக்ககும் காதலோ, இல்லை
கலைந்துவிட்ட காதலோ, புரியாமல்
அழுகிறது ஒரு காதல் கண்கள் ...
இழந்து விட்ட உறவா , இல்லை
மறந்து விட்ட உறவா, புரியாமல்
தவிக்கிறது உன் பார்வையின் மொழி...
தனிமையின் தவிப்போ, இல்லை
தவறவிட்ட உறவோ,பேசாத ஓவியமே
வேதனையின் உச்சமாய் , உன் பார்வை
கலையப்பட்ட கூந்தல், உன் கனவை
களைத்தனரோ காமகயவர்கள் , என
பதறி துடிக்கும் நெஞ்சம் ...
அழிந்துவிட்ட இயற்கையோ, இல்லை
இதுவே கடைசி, இனியொரு மரம்
இல்லையன்று ஏங்கும் ஏக்கமோ
தெரியவில்லையடி எனக்கும் ...
எதுவாயினும் எல்லா சோகமும் கடந்துவிடும்..
பூத்துவிடு ஒருபுன்னகை என்னும் நம்பிக்கையை...
புதம்புது மலராய் உன்னைக்கணா தவிக்கிறேனடி ,
என் பேசாத ஓவியமே ...