கவர்ச்சி நடிகையின் பேட்டி

நிருபர் கூட்டம்:

நிருபர்: மேடம் இப்போது முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறீகள். உங்களுக்கு லட்சக்கணக்காக்ன ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்களுக்குப் பட வாய்ப்புக் குறைநதால் என்ன செய்வீர்கள்?

கவர்ச்சி நடிகை: தமிழ் ரசிகர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். என்னை இதய தெயமாக ஏற்றுக் கொண்டவர்கள். படம் வெளியாகும் போது குடம் குடமாய் பாலைத் தெருவில் கொட்டி பாலாபிஷேகம் செய்கிறீர்கள்.. இது என்னைப் போன்ற நடிகர் நடிகையர் மீது ரசிகப் பெருமக்கள் வைத்திருக்கும் பக்தியைக் காட்டுகிறது. எங்களில் சிலருக்கு கோயில் எல்லாம் கட்டியிருக்கிறார்கள். எனக்கும் கோயில் கட்டுவதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என் அனுமதிக்குக் காத்துக்கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட ரசிகப் பெருமக்கள் எனக்காக எதுவும் செய்வார்கள்.

நிருபர்: மேடம் என் கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லையே?


க. நடிகை: நடக்கப் போறதை முன்கூட்டியே துல்லியமாக் கணிச்சுச் சொல்லறேன். . படவாய்ப்புப் போனால் என்ன. அரசியல் இருக்கிறது. அதில் சேர்ந்து நடிப்பேன். கண்டிப்பாக என் ரசிகப் பெருமக்கள் எனக்கு 2021- தேர்தலில் வெற்றி வாகையைச் சூடுவார்கள். மே மாதம் 2021 ஆம் ஆண்டு எனது பதவி ஏற்பு விழா நடக்கும். இப்போதே உங்களுக்கு ‘அட்வான்ஸ் இன்விட்டேஷன்” வந்து விடுங்கள். நன்றி . வண்க்கம். .

எழுதியவர் : மலர் (11-May-15, 9:27 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 290

சிறந்த நகைச்சுவைகள்

மேலே