ஒவ்வோர் துடிப்பிலும்

காதலிப்பவர்கள் எல்லாம்
கண்டிப்பாய்
பைத்தியக்காரர்கள் அல்ல
அவர்கள் காதலால்
அடிக்கடி குழந்தை
ஆகிடும் அதிர்ஷ்டக்காரர்கள்

நானும் ஓர்வகையில்
நல்ல அதிர்ஷ்டக்காரன்தான்
நீயென் அருகில்
நீங்காது இருக்கையில்

நம் சந்திப்பின் முடிவில்
நீ கிளம்பிடுவாய்
எனத்தெரியும்,
இருந்தும் விடாப்பிடியாய்
பிடித்திருக்கிறேன் உன்கையை
விழியோர நீரோடு...

போகாதே நீயெனக்
கூறுகிறேன்
உன்விழியோரமும்
தெரிகிறது நீர்...

ஒன்றாக நடந்து
கொண்டிருக்கிறோம்
நாம் கோர்த்திருந்தது
கைகளை மட்டுமல்ல
உருவம் தெரியாத
நம் உள்ளங்களையும்தான்...

யாருமற்ற அமைதியான
இடத்தில் உணர்ந்தேன்நான்
நீ இறுக்கமாய் என்கை
பிடித்ததையல்ல...
உன் இதயத்தில் நான்
இடம்பிடித்ததை...

யாரேனும் வருகிறார்களா
எனத்தேடிப்பார்க்கிறாய்
இல்லையெனத் தெரிந்ததும்
உன் இதழ்களால்,
என் நெற்றி தொடுகிறாய்...

முத்தமிட்டு நீ
கிளம்பிவிட்டாய்,
முதல்முறை என்
உயிர்தொட்ட உணர்ச்சியை
பெற்றெடுத்த
உன் முத்தத்தை
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
இன்னமும் நான்...

நெற்றியில் அல்ல
நான் வாழ்வதற்காகவே
துடிக்கும்
என் நெஞ்சத்தில்...

ஏனோ
ஒவ்வோர் துடிப்பிலும்
உணர்கிறேன் நான்
ஒற்றியெடுத்த உன்
இதழ்களின் சத்தத்தை....

எழுதியவர் : சத்யரஞ்சித் (11-May-15, 10:33 am)
சேர்த்தது : சத்யரஞ்சித்
Tanglish : ovvor thudippilum
பார்வை : 107

மேலே