முதல் லஞ்சம் 300

ஏந்தம்பி உன்னப் பாத்தா படிச்சவன் மாதிரி தெரியுது. நீ ஜெய்லுக்கு வர்ற அளவுக்கு என்ன தப்பு பண்ணின.

அதை ஏன் அண்ணே கேக்கறீங்க. நான் நேர்மையான ஊழியனாப் பணியாற்றி வந்தவன். என்னை லஞ்சம் வாங்கத் துப்பில்லாத மனுஷன்னு என்

மனைவி அடிக்கடி கேவலபப்டுத்தினா. நானும் அடிக்கடி மனமொடிஞ்சு போனேன். போன மாசம் ஒரு நாள் ஒரு ஆளு எங்க அலுவலகத்துக்கு வந்து

அவசரமா ஒரு வேலையை ஒடனே முடிச்சுத் தரணும்ன்னு ரொம்பத் தொந்தரவு கொடுத்தான். எனக்கு அப்ப என் மனைவியின் நச்சரிப்புத் தான்

ஞாபகத்துக்கு வந்தது, அந்த ஆளிடம் 300 ரூபாய் கொடுத்தா உடனே முடிச்சுத் தர்றேன்னு சொன்னேன். அவன் “இப்ப எங்கிட்ட 100 ரூபாய் தான்

இருக்கு. நீங்க வேலையை முடிச்சு வையுங்க. மீதிப் பணத்தோட இன்னும் அரை மணி நேரத்திலெ வர்றேன்னு” சொல்லிட்டுப் போனான்.

சொன்னபடியே வந்தான் அவன் எங்கிட்ட பணம் 300யும் தர்ற போது தீடீர்ன்னு வந்த லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் என்னக் கையுங்களவுமா

பிடிச்சிட்டாங்க. 300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வேலையும் போச்சு. ஜெயில் தண்டனையும் கெடச்சிருச்சு. 6 மாசம் கழிச்சு வெளியிலே போயி எப்படி

தெரிஞ்சவங்க மொகத்திலெ முழிப்பேன். என்ன வேலை செஞ்சு குடும்பத்தைக் காப்பாத்துவேன்னு தெரில அண்ணே. மொதல் லஞ்சம் 300 என்

தலைவிதியையே மாத்திரிச்சு அண்ணே.

எழுதியவர் : மலர் (12-May-15, 2:21 pm)
பார்வை : 299

சிறந்த நகைச்சுவைகள்

மேலே