கோடையில் புரட்சி

கோடையில் ஓர் புரட்சி
உச்சி வான கரு முகில்கள்
பொழிந்து தீர்த்தது
பூமி குளிர்ந்து ; மக்கள் மகிழ்ந்தனர்
வெகுண்டு பார்த்தான் கதிரவன்
வெகுண்டு நோக்குவதேனோ தலைவா ?
பருவக் காற்று வீசப் போகிறது
முகில் கூட்டங்களுக்கு கொண்டாட்டம்
பொழிவோம் பொழிந்து கொண்டே இருப்போம்
சில மாதங்கள் உன் கதிர் வீச்சுக்கு ஓயவு
உன்னாலேயே உருவானோம்
உன் பெயர் காக்கவே பொழிவோம்
இது அழிவுப் புரட்சியில்லை ; ஆக்கப் புரட்சி
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (14-May-15, 7:57 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : kodaieall puratchi
பார்வை : 93

மேலே