உண்மை ஊழியனை ஊரேப் போற்றும்
உண்மை ஊழியனை ஊரேப் போற்றும் ......! (பகுதி ஒன்று)
ஊழியன் - மக்களுக்கான தேவையறிந்து சேவை செய்கின்றவன். "உண்மை விளம்பேல்' - உண்மையை பேசுவது. நம்மை நாடி வந்தவர்களை, அவர்களின் தேவையறிந்து, சேவை செய்கின்றவன் உண்மை ஊழியானாகிறான்.
என்ன அது, உண்மை ஊழியன்; மற்றவர்கள், மற்ற ஊழியர்கள் அவர்கள் யார்? உண்மை நிலைதனை அறிவது எப்படி? உன்னிலும், என்னிலும் உண்மைகள் இல்லையா? இதனை யார் அறிவார்கள். எதனைக் கொணர்ந்து இந்த நிலையினை அளப்பார்கள். இந்த உண்மை நிலையென்ன?
அன்றைய நாட்களில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள், தன குடும்பம், தன மக்கள், தன சுற்றத்தார், தன சமுகம் என நினைக்காமல், மக்களின் நலன் கருதி, அவர்களின் தேவைகளை, அவர்களிடத்தே நேரில் சென்று, விசாரித்து அறிந்து, அந்தந்த பகுதியின் குறைகளை நீக்கி, அப்பகுதி மக்களின் மக்களின் குறைகளை போக்கி, அவர்கள் நலமுடன் வழி செய்வார்கள்.
ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருமுறை தேர்ந்து எடுக்கபட்டார். அவர் ஜனாதிபதியாக இருந்தப் பொழுது, தினமும் குதிரை மீது பயணித்து, கிராமம், கிராமமாகச் சென்று, மக்களின் குறைகளைக் கேட்டு, அதனை உடனடியாக நிவர்த்தி செய்வாராம். அதனால் தான் அவர் அமெரிக்கா மக்கள் மட்டுமன்றி, உலக மக்களாலும் இன்றளவும், போற்றுதலுக்குரிய மனிதராய், தலைவராய் இருக்கின்றார்.
ஒரு செருப்பு தொழிலாளியின் மகனாக, சாதாரண வாழ்க்கை வாழ்ந்து, அவர் போற்றுதலுக்குரிய ஜனாதிபதியாக உயர்ந்தார். அவரின் சிறிய வயதில், அவர் வாழ்ந்த ஊரில் உள்ள சர்ச்சில், அவரிடம், "நீ என்னவாகப் போகிறாய்'' என்றுக் கேட்டதற்கு, "தான் பிற்காலத்தே அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகப் போகின்றேன்" என்றுக் கூறினாராம். அதனைப் போல, உழைத்து, உழர்ந்து, அவர் மக்களுக்காக வாழ்ந்தாராம்......
பகுதி இரண்டு தொடரும்.................
ந. தெய்வசிகாமணி