குழப்பம்
ஊருக்கு போன நேரம். உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்களின் அனுபவம் பற்றி பிறரிடம் பகிர்ந்துகொண்டு தங்களின் மனதில் உள்ள வேதனைகள் வலிகள் என்று அணைத்து துன்பங்களையும் மறந்துவிட்டு இருக்கும் நேரம். நகரத்தில் வாழும் மக்களுக்கு அது ஒரு பொற்காலம்.
காலை 11 மணிக்கு துணி அனைத்தையும் மூட்டை போட்டுவிட்டு பின் பழைய சாதம் குழம்பு புளியோதரை என்று அனைத்தையும் எடுத்து கொண்டு குளிக்க ஆருக்கு கிளம்பி விடுவோம் அங்கு போன பின் அனைவரும் தண்ணிரில் இறங்கி 2 அல்லது 3 மணி நேரம் குளிப்போம் பிறகு கரைக்கு வந்து சாப்பிடும் போது இருக்கும் சுகம் எங்கே கிடைக்கும்? துவச்சிவச்ச துணிகளை காய வைத்து பின் அதை மூட்டை போட்டு விட்டு வீட்டுக்கு வந்து ஒரு குட்டி தூக்கம்.
பின் மாலை நேரம் அனைவரும் தெருவில் ஒன்று கூடி சிறுவர்கள் ஒரு கூட்டமாக பெரியவர்கள் ஒரு கூட்டமாக மண்ணில் அமர்ந்து அரட்டை அடிக்க தொடங்குவும் பின் அனைவர்க்கும் டி வரும் அத்துடன் மிச்சர் அச்சுமுறுக்கும் வரும்.
பின்னர் அந்த "சோளம்" விளையும் தோட்டத்துக்குள் போவோம் வேண்டியதை எடுப்போம் பிறகு குச்சிகளை தேடுவோம் அதை நெருபிட்டு சோளத்தை வேகவைபோம் அனைவர்க்கும் கொடுப்போம்
அதை தின்று கொண்டே அரட்டை அடிப்போம் மண்ணில் ஓடுவோம் இப்படியே நேரம் ஓடும்.இப்படியே ஊருக்கு சென்ற நாட்கள் ஓடும். ஊருக்கு போகும் போது மனதில் வெறுப்பும் கோவமும் தான் இருக்கும் ஆனால் அனைவரையும் விட்டு பிரியும் போது கண்களில் கண்ணிர் மட்டுமே திரும்பி எடுத்து கொண்டு வருவோம் ..
வந்து ஓர் இரு நாட்கள் ஊரை பற்றியே நினைவுகள் மனதில் ஓடும்.பின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி ஆக வேண்டும்.இப்படித்தான் ஒரு நாள் ஊருக்கு போயிட்டு வந்த சில நாட்கள் கழித்து கல்லூரிக்கு போய்டு வரும் நேரம் நுங்கம்பாக்கம் பகுதியே மக்கள் கூடம் அலை மோதும் நண்பர்களுடன் பேசி கொண்டே ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டு இருக்கும் போது நடைபாதையில் "சோளம் சோளம் " என்று கூவும் சத்தம் காதில் வந்து விழுந்தவுடன் திரும்பி பார்த்தேன் ஆனால் கூட்டம் மறைத்துவிட்டது. நினைவுகள் எல்லாம் ஊருக்கு போனது, நண்பர்களுடன் பேசி கொண்டே நடக்க தொடங்கினேன்...
"சோளம் சோளம் " என்ற வார்த்தை என் செவிக்குள் கேட்டுகொண்டே.........
கிழக்கு தாம்பரம் வந்தடைந்தேன் அங்குள்ள பஸ் நிலையத்தில் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் அங்கு ஒரு காந்த குரலில் ஒரு சத்தம் "சோளம் சோளம்" என்று உடனே நின்று பார்த்தேன் ஒரு வண்டியில் விற்று கொண்டு இருந்தான் ஒருவன் உடனே போய் நானே ஒன்று எடுத்து கடிக்க ஆரம்பித்தேன் அவனோ முறைத்தான் நான் ' எவ்ளோ தம்பி ' என்றேன் 20 என்று பதில் வந்தது குடுத்து விடு வந்தேன் வீட்டுக்கு பின் அம்மா விடம் சோளம் சாப்பிட்டதை சொன்னேன் .உடனே "அட பாவி 20 ரூபாய் குடுத்தா வாங்குன ? என்றால் "ஆமா" என்றேன் முறைத்து விட்டு உள்ளே போனால் அம்மா. நான் என் மனதில் அம்மாவுக்கு என்ன தெரியும் என்று நினைத்தேன்
இப்படியே தினமும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போவேன். முதல் நாள் முரைத்த அந்த பையன் இப்போது நண்பன் ஆகிவிட்டான்.ஒரு நாள் வீட்டுக்கு போன பின்னர் அம்மா எனிடம் ' டேய் நி மட்டும் தனிய வாங்கி சாப்டு வரியே எல்லாருக்கும் வாங்கிட்டு வராதுதானே " என்று சொன்னால். பின்னர் அடுத்த நாள் அதற்கென்று காசு தனியாக வங்கி கொண்டு போனேன்.. கல்லூரியில் அன்று நண்பர்கள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது இதனால் மிகவும் சோகமாக இருந்தது.. நான்கு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு புறப்பட்டேன். அந்த நடை பாதை அன்று கூட்டமே இல்லாமல் தவித்தது.
மெதுவாக நடக்க ஆரம்பித்தேன் ரயில் நிலையத்துக்கு.பின்னர் அங்கு சோளம் விற்கும் அக்க ஒருவரை பார்த்தேன் செரி இங்கு ஒன்னு வங்கி பாக்கலாம் என்று அவளிடம் அணுகினேன் பிறகு
"சோளம் எவ்ளோவு? 20தம்பி என்று சொன்ன உடன் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் காசை எடுத்து நீட்டினேன் அவள் ஒரு பிளாஸ்டிக் பையில் கொத்தாக இருந்த சோளம் எடுத்து நிட்டினால் என்னிடம் நான் முழித்தேன் சுற்றி சுற்றி பார்த்தேன். 20ருபைகு ஐந்து சோளமா ??? அந்த அக்கா "என்ன தம்பி ?"என்று கேட்க நான் பொறுமையாக நடக்க தொடங்கினேன். பின் மனதில் ஒரே குழப்பம் என்னடா இது இத்தனை நாளாக ஒரு சோளம் 20ரு வங்கி கொண்டு இருந்த நான் இப்போது ஏமாளிய ?? என்று குழப்பத்தில் போனேன் இப்போது அந்த அக்காவும் அந்த பையனும் மனதில் மாரி மாரி வந்து போனார்கள் " இவர்களில் யார் ஏமாளி ?? இவர்களில் யார் ஏமாற்றுகிறார்கள் ??/ என்று
வீட்டுக்கு வந்து குடுத்தேன்.இரவு முழுவதும் ஒரே குழப்பம் இந்த நகரத்தில் எவ்ளோ குழப்பங்கள் இருக்கிறது ஒரு சாதாரன சோளத்தில் எவ்ளோ பெரிய விளக்கம் உள்ளது என்று.. எத்தனை பேருக்கு இது தெரியும் அவர்கள் மனம் என் போன்றே வேதனையும் அடைவார்களா ?? இருவரும் அதே 20ரு தான் வியாபாரம் செய்கிறார்கள் ஆனால் அதில் எவ்ளோ வித்தியாசம் இருக்குது. அன்று ஒரு சந்தேகம் எதற்காக அந்த அக்கா 20ரு ஐந்தும் அந்த பையன் 20ரு ஒன்று விக்க வேண்டும் என்று. அந்த அக்கா ஏன் 20ரு வியாபாரம் செய்யவேண்டும் அவள் முட்டால அல்லது பிழைக்க தெரியாதவள ?அல்லது நான் முட்டால? இல்ல நான் இத்தனை நாள் ஏமாற்றப்பட்டன? அல்ல நான் அந்த அக்காவை எமற்றிவிடேனா என்ற அச்சமும் மனதில்.குழப்பம் குழப்பம்..... இறுதில் குழப்பம் திரவேயில்லை ஆனால் ஒரு முடிவுக்கு வந்தேன் கிராமத்தில் போய் வாழவேண்டும் என்று.