என் சொந்தம்

சுட்டெரிக்கும் வெயில்
கூட்டம்யில்லா ரயில் பெட்டி
அமர்ந்தேன் ஜன்னல் ஓரத்தில் !

நெற்றியில் ஒரு சின்னத்துடன் வந்தவர்
சுற்றி சுற்றி பார்த்தார்-பின்
அதே சின்னத்துடன் போய் அமர்ந்தார் !

அகலமான மீசை லேசான சிரிப்பு
மீசையை முரிகிகொண்டே ஒரு பார்வை - பின்
அதே மீசையுடன் போய் அமர்ந்தார் !

கழுத்தில் தொங்கியது ஜபமாலை
பதட்டத்துடன் உள்ளே பார்த்தார் - ஜபம்
சொல்லிக் கொண்டு இருந்தவரிடம் போய்க் கைகுளிகினர்!

என் அருகில் பார்த்தேன் யாருமில்லை
கண்கள் கலங்கியது- என் தமிழ்
சொந்தம் எங்கே என்று !

எழுதியவர் : ரிச்சர்ட்சன் (15-May-15, 5:50 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்சன்
Tanglish : en sontham
பார்வை : 218

மேலே