என்னை பிடிக்குமா

உறக்கம் இல்லையடி உயிரே
என் இரவில் சூரியன் முளைக்குதடி !

கனவும் வரவில்லையடி உயிரே
பகல் தூக்கமும் பறிபோனதடி !

எனோ நீ வந்தால்
என்னை விட்டு பிரிகிறேன் !

எனோ நீ சென்றால்
வழியெங்கும் தேடி அலைகிறேன் !!!

அடி பெண்ணே பசி இருந்தும்
பத்தியம் இருக்கிறேன் !

உன்னை பார்க்கத்தானே பேசத்தானே தவிக்கிறேன் !

உனக்கு என்னென்ன பிடிக்குமோ யோசிக்கிறேன் !

என்னை பிடிக்குமா என்றே
முதல் கேள்வியாய் கேட்கிறேன் !

இனி எல்லாம் என்னுள் மாறுமே
என் உலகம் உனக்குள்
இடம் பெயருமே !!!

(கவி செந்தமிழ்)

எழுதியவர் : கவி செந்தமிழ் (15-May-15, 6:12 pm)
பார்வை : 275

மேலே