எல்லாமே நீ தான்
பூவே நீ பொய் சொல்லாதே
உன்னை விடவும் அழகாய்
அவள் இருக்க !
குயிலே நீயும் பொய் சொல்லதே
உன்னை விடவும் அழகாய்
அவள் பேச !
என் தேசம் அவள் மட்டும் தான்
என் தேசியகீதம் அவள்
குரல் மட்டும் தான் !
அவள் கூந்தலுக்கு செல்லும்
பூவெல்லாம் தேசிய மலராகும் !
அவள் வீட்டு நாய் குட்டியே
தேசிய விலங்காகும் !
அவள் பார்த்து ரசிக்கும்
இடமெல்லாம் புனிதத்தலமாகும் !
அவள் விரும்பி படிக்கும் புத்தகமெல்லாம்
இனி தேசிய நூலாகும் !
அவளின் வாழ்க்கை வரலாறு வையமெங்கும்
கட்டாய பாடத்திட்டம் ஆகும் !
அழகு ஆராய்ச்சி கழகம் ஒன்றை
அரசு அமைத்திடும் ,
அவளின் அழகு ரகசியம்
அறிய முடியாமல் தோற்றிடும் !
உலக அதிசயங்கள் ஏழு எட்டு
என பேசும் உலகெல்லாம் ,
முதல் அதிசயம் பெண்ணே
நீ யென்று பேசும் !
உன்னுள் இருக்கும் அதிசயங்களை
எண்ணினாலே எண்ணிக்கையற்று நீலும்.....!!!