சிறகு

சிறகு
========================================ருத்ரா

சிறகு விரித்தாற்போல்
சிரிப்பு.
நிழல் கோலமிட்ட
நினைவுச்சுவடுகள்.
ஆழமாய் நீருக்குள் நான்.
உன் அசைவுகள்
என் இதய தடாகத்தில்
அதோ குரல் குமிழிகளை
உடைத்து உடைத்து தருகிறதே.
நீ
எந்த அறையில் இருக்கிறாய்.
ஆரிக்கிளா? வெண்டிரிக்கிளா?
"வாத்து பார்த்தது போதும் வா"
அதட்டினார் அப்பா
உன்னிடம்
அந்த ரப்பர் குமிழ்கள்
என் சிஸ்டாலிக் டையாஸ்டாலிக்
முணு முணுப்புகளை
பாதரஸக்கண்கள் கொண்டு சிமிட்டுவதை
திரும்பி பார்த்துக்கொண்டே
திரும்புகிறேன்.

======================================================

எழுதியவர் : ருத்ரா (16-May-15, 8:32 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : siragu
பார்வை : 83

மேலே