பருவத்தேர்வுகள்
பருவத்தேர்வுகள்
=============================================ருத்ரா
செமஸ்டரில் கவனம் வை.
என்றார் அப்பா.
ஆமாம்
அவளிடம்
இரவல் வாங்கும் புத்தகம்
இதயம் ஆகிப்போனதே.
ப்ராஜெக்ட் முடிக்க கூட
அவள்
புன்னகைப்பூ அல்லவா
வேண்டியிருக்கிறது.
முடிவு செய்து விட்டேன்
எப்படியாவது
காதல் செமஸ்டர்களின் அர்ரியர்ஸை
முதலில் முடித்து வைப்போம்.
=================================================