தலைப்பு இன்னும் வைக்கவில்லை பாகம்-2
இருவரும் ஏதோ
செய்துகொண்டிருந்தார்கள்
எங்கள் வீட்டு நடுக்கூடத்தில்.
சட்டென பாய்ந்து
சட்டத்தில் பொருத்திக்கொண்டது
மோனாலிசா, எனைக் கண்டவுடன்.
சுவரில் எழுதியிருந்த நான்கு
வண்ணக் கோடுகளைக் காட்டி
வானவில் என்றாள்,
என் குட்டித் தேவதை.
சற்றே குழப்பத்துடன்
வெளியே சென்று
உற்றுப்பார்த்தேன்,
நான்கு வண்ண வானவில்
பூத்திருந்தது.
மெல்லத் திரும்பி
எனைப்பார்த்த மோனாலிசா
இன்னும் கொஞ்சம் அதிகமாக
சிரித்துக்கொண்டிருந்தது.
-தர்மராஜ் பெரியசாமி