விடைகள் தெரியவில்லை

விசித்திர உலகையும்
வியந்து நோக்கினேன்
வினாக்கள பல பிறந்தன
விடைகள் தெரியவில்லை
விளக்கித்தான் கூறிடவும்
விரிவாக தெளிவுபடுத்தவும்
விவரமறிந்தோர் இலையோ
வீணானதோ சமுதாயமும்
வீழ்ந்ததோ அறிவும் ஆற்றலும்
விழித்தெழுமா இதயங்களும்
விழுதகளேனும் சிந்திக்குமா
விழுந்திட்ட தமிழுணர்வும்
வீறுகொண்டு எழுமா இனி .......
விரிசலான உறவுகளும்
விவேகமுடன் இணையுமா ....
வீரியமும் பெற்றிடுமா
விரைவில் உணர்வுகளும் ....
பழனி குமார்