நானும் - நிலவும் - கடவுளும் - 12206

தனிமையில் எழுதிய
கவிதையில் நிலவொளி
வரிகளாய் வளர
விழிகளால் படித்தேன்...
எதுகையாய் மோனையாய்
எழிலான அணிகளாய்
இலக்கணம் சொன்னது
இன்பமாய் வெண்ணிலா
இறைவனே நன்றி
இயற்றி வைத்தாய் கற்பனை
இப்பிறவியிலும் எப்பிறவியிலும்
இனியவா உனக்கு என் வந்தனை....!!