உங்களின் கனிவான கவனத்திற்கு

வயது நாற்பது தான்,
நியாயமாய் சந்தோசம்
கூதுகளிக்கும் பருவம் தான்.

ஆனால் எனக்கோ,
விரக்த்தி பிடித்து ஆட்டுகிறது.

எதைக் கேட்டாலும் எரிச்சல்,
எதைப் பார்த்தாலும் படபடப்பு,
என்ன செய்கிறோம், தெரியவில்லை,
எங்கே செல்கிறோம், விளங்கவில்லை.

குழம்பிக், குழம்பி
மனம் குன்றி,
மாண்டு போக முடிவாய்
இருந்தேன்.

நேற்று இரவு,
எதிர் வீட்டு தாத்தா,
குறி சொல்லுவது போல்,
"கவனமாய் இருந்தா
குழப்பம் குழம்பி ஓடிடும்"
என்றார்.

"கவனம்" என்றால் என்ன?
யோசிக்க இஸ்டமின்றி,
வலைதளத்தில் வலை வீசினேன்.
புரிந்து கொண்டேன்.

படுத்தேன்,
அயர்ந்து தூங்கி
அதிகாலை விழித்தேன்.

கவனமாய் படுக்கையை சுருட்டி,
அழகாய் மடித்து,
படுத்திருந்த இடத்தில் கால் வைத்தால்,
இதமான சூட்டில் இருந்தது.

தண்ணீர் குழாய் திறந்து,
வலது கை குறுக்கி,
தண்ணீர் நிறைத்தால்,
பல பலவென்று மிண்ணியது,
கூச்சம் விலகாத கண்களை,
தண்ணீர் இட்டு கழுவினேன்.

கழுவிய முகத்தை,
கண்ணாடியில் பார்த்தால்,
ஜொலிப்பது புரிந்தது.

கவனம் குறையாமல்,
பல் துலக்கினால்,
பற்கள் என்னைப் பார்த்து
வெட்கத்தில் சிரித்தது.

இதேபோல் கவனத்தோடு,
ஒவ்வொரு வேலையாய்
முடித்துவிட்டு, வெளியே வந்தேன்.

சிவப்பும், மஞ்சளும் கலந்த
வண்ணத்தில் வானம் வசீகரித்தது.
குறுக்கும், நெடுக்குமாய்
குருவிகளும், காக்கைகளும்
கூட்டம் கூட்டமாய் இடம் பெயர்ந்தபடி
இருந்தது.

எங்கோ எனக்காக ஒரு குயில்,
கூ கூ கூ என்று கூவிய நாதம்,
என்னை குஷிப் படுத்தியது.

கவனத்தை பாதையில்
இட்டு நடந்தேன்.
ஒரு வீட்டு வாசலில்
எனாமல் பெயிண்ட் இல் ஒரு கோலம்,
அதில் காய்ந்து போன நாயின் விட்டை.

கூச்சப் படாமல்,
காலால் அதை உதைத்தெரிந்தேன்.
இப்போது கோலம் கோலாகலமாய்
சிரித்தது - கூடவே அந்த வீட்டாரும்
நன்றி கூற கூச்சப் பட்டு
புன்னகை பூத்தனர்.

அடுத்த தெருவில்,
தேநீர் விடுதி,
தேர் கூட்டம்.
வரசை இல்லாத
வரிசையில் நின்று,
தேநீர் பெற்று,
அருகிலிருந்தவரிடம் அளவாடிக்கொன்டே,
கவனமாய் அருந்தினால், அலாதி சுவை.
சுவையின் சுகத்தை டீ
மாஸ்டர் இடம் சொன்னால்,
சமைந்த பெண்போல் வெட்கப் படுகிறார்.

அப்படியே,
பூக்கார அம்மாளிடம்
பூ கட்ட பழகிக் கொண்டு.
பழ வண்டி காரரிடம்
பழ நிலவரம் கேட்டு தெரிந்து,
எழனி காரரோடு
பொள்ளாச்சியை புரிந்து கொண்டு,
பேப்பர் கடையில்,
நாளிதழ் வாங்கி வீடு திரும்பினேன்.

புத்துணர்ச்சி பொங்கிற்று,
புது அனுபவமாய் தோன்றிற்று.
ஏதோ என் மனம் சொல்லத் துடித்தால்,
காது குடுத்துக் கவனமாய் கேட்டேன்...

மனம் பேசலானது....

இந்த உலகம்
எவ்வளவு அழகுடையது?
உன்னை பூமிப் பந்தில்
பிறக்க வைத்த காரணம் தெரியுமா?
அழகாய் இருக்கும் உலகத்தை,
மேலும் அழகாக்கவே!

உனக்கு கொடுத்திருப்பதோ,
குறைவான அவகாசம்.
உன் நேரம் முடிவதற்க்குள்,
பார்க்க வேண்டிய இடங்கள்,
பேசவேண்டிய விஷயங்கள்,
கற்க வேண்டியவைகள்
அனைத்திலும் ஆட்படுத்திக் கொள்.

நேரத்தை நொந்துகொண்டு,
விரயமாகாத்தே.

இங்கு நீ,
எதையும் செய்யலாம்,
எதுவாகவும் மாறலாம்,
யாரையும் மாற்றலாம்,
ஏன் இந்த உலகத்தையே மாற்றலாம்.

ஏதாவது புதியதை
கற்றுக்கொள்.
கற்றதை செயலாக்கு.
செயல் படுத்தியபின்,
வேறொன்றை புதிதாக
கற்றுக்கொள்.

வெற்றி, தோல்வியை விட
அனுபவமே அறிய பரிசு.

கவனமே அனுபவத்தை
ஆட்கொள்ளும் சூட்சமம்.

ஆகவே,
எதிலும் கவனமாய் இரு,
பாசமாய் பழகு,
நேசக் கரம் நீட்டு,
மன்னிக்கும் மனதை விசாலப் படுத்து,
மரியாதை கொடு,
நம்பிக்கை கொள்,
இயற்கையோடு கை கோர்த்து நட,
யாருடைய கோபத்தின் மீதும் கொதிப்படயாதே,
அன்பை வெளிப்படுத்த தயங்காதே,
அன்பைப் பெற்றுக்கொள்ளவும் மறக்காதே.

மதிகலங்க ஆடு,
உள்ளம் இன்புற கீதங்கள் பாடு,
வயிறு இனிக்க உண்டு மகிழு,
சத்தமாய் சிரி,
குழந்தைபோல் அழுது முடி.

வயது உன் சரீரத்திற்கே தவிர,
உள்ளத்திருக்கு இல்லை என்று உணரு.

கவனத்தோடு அன்பைப் பரப்புவோம்,
வாழும் நாட்க்களை பயனுள்ளதாய்
மாற்றுவோம்.

எழுதியவர் : கணேஷ்குமார் balu (17-May-15, 12:32 am)
பார்வை : 278

மேலே