உள்ளம் விற்கும் உலகு- போட்டிக் கவிதை-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்

தாயை கைவிட்டார்கள்
சேய் எனும் நயவஞ்சகர்கள்
ஆத்திகன் தன்னையே விமர்சித்தான்
நாத்திகன் உலகையே விமர்சித்தான்.

அகரத்தில் தவழ்கிறது நன்மை
சிகரத்தில் கொடிகட்டி பறக்கிறது பாவம்
மகப்பேற்றின் புனிதம் அறியாதவள்
குழந்தையை தாலாட்டுகிறாள் குப்பைதொட்டியினால்

சிலை செய்யும் கல் தான்
சாலையில் தெருநாய் துறத்தும் ஆயுதம்
பல்கலைக்கழகம் எனும் ஓவியம்
தினந்தோறும் எழுதுகிறது காதல் காவியம்

வைத்தியன் கூட பாமரனின்
உடல் உறுப்பை திருடுகிறான்
இறைவனைக்கூட ஈ.பி.கோவில் நிறுத்தினர்
மார்க்கம் கற்ற ஆன்மீக வாதிகள்

செல்வன் உடல்கழுவும் நீச்சல் தடாகம்
இன்று இறந்த சிறுவனுக்கும்
நாளை இறக்கப்போகும் சிறுவனுக்கும்
தாகம் போக்க துளி நீரில்லை ஆபிரிக்க மண்ணில்.....

பசுமையான இரும்பை உருக்கி
வன்மையான ஆயுதமாக்குவதைப் போல்
பிறந்த மனிதனெல்லாம் நாட்கள்
செல்ல செல்ல மனதை கல்லாக்கி கொண்டான்.

கடவுளே!உயிரோடு தான் இருக்கிறாயா?
உள்ளம் விற்கும் நிகழ்கால உலகை
ஐம்பூதங்களால் அளித்து விடும்.அடுத்த
சங்கதிகளாவது புண்ணியத்தோடு வாழ...!!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (18-May-15, 2:10 pm)
பார்வை : 153

மேலே