ஆசானை அடிதொழுவோம் --- வெண்பா

நேசத்தால் சிந்தித்தேன் ; நேர்மையுடன் ஆசானே !
பாசத்தால் சொல்லுகிறேன் ; பற்றினாலும் சொல்லுகிறேன்
வாசமிகு வாக்கினுக்கு வாழ்த்துகிறேன் நானென்றும்
மாசற்ற மான்புடையீர் மாண்பு .

காண்கின்ற காட்சியெலாம் கண்நிறைந்து பார்க்கின்றேன்
மாண்புடைய ஆசானே மந்திரத்தால் கட்டிவைத்தீர் .
நித்திரையில் நீர்மறந்து நீண்டநேரம் தூங்கிடுவீர் .
பத்திரமாய் வாழ்ந்திடுவீர் பார்த்து .

அன்பினில் கட்டிவைத்த ஆசானே ! நீங்களும்
உன்னத சீலர் ; உலகினில் என்றுமே
பண்புடன் வாழ்ந்திட பாசம் விடுப்பீரே;
கண்கள் மறைத்திடும் காண்.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-May-15, 3:09 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 64

மேலே