விடியல் என்பது

பழைய கந்தல் சேலை உடுத்திக்க
கிழிந்த பாயில்தான் படுக்கை
இருந்தும் பழகியாச்சு.ஶ.ஶ

குந்திக்கொள்ள குடிசை இருந்தும்
மேற் கூரையில் விருந்தாளியாய்
அங்கஙகே சொட்டு நீர்பாசனம்
உட்கார இடமின்றி..

விடிய விடிய விழிகளும்
பழகியாச்சு இராத் தூக்கத்துக்கு
சிறைத்தண்டனை கொடுத்து...

விடிந்த பின்னே நாய் பொழப்பு
நாத்தம் சுமந்து வீதிதோறும்
கம்பெடுத்தும் தூய்மை இந்தியா
என்னும் சொல்லெடுத்து..ஶ

வீதிதோறும் கூடை முடைஞ்சி
வயிற்றுப்பிழைப்புக்காய்
கூடையே குடையாய்
கொழுத்து்ம் வெயிலிலும்
தொடர் மழையிலும்.....

தெருவோரம் சத்தான களைகளை
வேரறுத்தும் வேரோடு சாயும்
குலக் கொழுந்துகளைக் காப்பாற்ற மனமில்லை கொழுத்துக் களிக்கும்
சத்தான கள்ளிகளுக்கு...

இப்படி நடமாடும் ரோசாக்கள்
காவலாய் விடிய விடிய
விடிந்தபின்னே பேசிபேசி
முளைத்த சண்டைகளையும்

வெள்ளிப் பாத்திரங்கள் கண்சிமிட்டி
சொல்லி ரசிக்கத்தான் செய்கிறது
மண்பானை கதைளை....!!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (18-May-15, 3:12 pm)
பார்வை : 64

மேலே