தான்தோணிக்கூடாரம்

தான்தோணிக்கூடாரம் - டைரி 2005
===============================

அம்பிலிமாமா கதைத்தொடங்கவேண்டும்
அப்போதுதான்
ஒரு கடி உதடு தருவான் ம்ம் :/
கதைமுடியும் முன் , கடித்து முடித்துவிடுவேன் ம்ம்
படுக்கையில் சேலைப்பூக்களை
உதிரச் செய்வான்
சூடிய மல்லிகையின்
வாசம் போதாமையால் ,,
மீண்டும் உடுத்திக்கொள்ள முற்படுகையில்
நாணங் கொள்கிறது
பூக்கள்விடுத்த என் நிர்வாண சேலை ம்ம்

விழிமோதலில்
கருத்தரிக்கச் செய்யும் கந்தர்வன்
கடையாணி இல்லாமலே
காதல் கிறுக்கும்
தான்தோணிக்கூடாரத்து மரக்கள்ளன்
அவன் சுவாசம் தெளித்து
கருகிய பூக்களுக்கு கவசமளிப்பான்
பாதம்படும் பூக்களெல்லாம்
நசுங்கிடும் வழியெங்கும்
அவன் பாதம்பட்டு
உயிர்ப்பெற்று குலுங்குகின்றது
மன பிருந்தாவனம்

தோழியோ நிலைக்கண்ணாடி பார்க்கிறாள்
வேண்டாம் பரவால்லை
எனக்கான நிலைக்கண்ணாடி அவனாக ,,
நான் அதையேன் பார்க்கிறேன் ,,
அதை அவள்தான் பார்த்துத் தொலையட்டுமே
எங்கே காண்பியேன்
என மீண்டும் கெஞ்சவேண்டும் மாதிரி
இருக்கிறது ம்ம்,,

எல்லா நிவர்த்திக்கேடுகளும்
அழகாவது அவனிடத்தில்தான்
அவன் நாத்தொடுக்கும்
எனைக்குறித்த வார்த்தைகள்
கொடுக்குகளாகினும்
வெட்கிக்கவேச்செய்யும்
தனிமையில் கவிதைகளாய்
நிலைக்கண்ணாடிக்குள் தொகைந்துவிட்ட
பாத"ரசம்போல
மூழ்கிக் கிடக்கிறேன்
சொல்லுங்களேன் இப்போதாவது
அவனுக்குள் பதிந்த எனை
எப்பொழுது காண்பிக்கப் போகிறானாம்
எனக்கே என்று

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (19-May-15, 2:21 am)
பார்வை : 85

மேலே