ஒளி ஓவியமாய்

தேவதை ஒன்று
தனிமையில் இன்று!
தேக்கிய கண்ணீரை
தாக்கிய துரோகத்தை
தாங்கிய சோகத்தை
வாங்கிய வஞ்சனைகளை
பொங்கிய கோபத்தை
உணர்ந்த வலிகளை
உள்ளத்துள் புதைத்து
விழிகளில் வாசித்தும்
அமைதிப் புறாவாய்
அழகுப் பெட்டகமாய்
பெண்மையின் இலக்கணமாய்
பொறுமை மிகு
ஒளி ஓவியமாய்
வடிவெடுத்ததோ...?