புன்னகை புயல்
நான் அழகாகிறேன்
என்றது மெழுகுவர்த்தி
இருளை அழைத்து.ஶ..
பதைபதைத்தது காற்றோடு
தாமரையின் நெஞ்சம்
தாம் விதவையாகிவிடுவேனோ என்று..ஶ
பாத அணிகள்
எப்போதும் துன்புறுத்துவதில்லை
எதற்கும் ஆசைப் படுவதுமில்லை
அரியாசனம் தேடுவதுமில்லை...
புன்னகையைத் தேடும்
அலைகளும் புனலும் புயலும்
ஒருபோதும் வெறுத்ததில்லை.
நீதி வாயிலில்
குற்றங்கள் ஒப்பிக்கின்றன
நியாயத் தராசை கூண்டில் அடைத்து.