நினைவுச் சங்கிலி

இந்த நினைவின் பாதை
போகும் வழியில்
பின் தொடர்ந்து செல்ல செல்ல
அங்கங்கே ..
காட்சிகள்..
முன் நடந்தவை..
அசைந்தபடி ..
அப்படியே எப்படி அழியாமல்..
அல்லது
கொஞ்சமேனும் மங்கிடாமல்
சுவற்றில் வரைந்த சித்திரங்களாய்..
இருக்கின்றன..
..
கல்லூரி நாட்களின்
யாருடனோ நடந்து சென்ற
காட்சிகள்..
..
வகுப்பை தவிர்த்து
திரைப்படக் கொட்டகையில்
நண்பர்களுடன் அடித்த அரட்டை காட்சிகள்..
..
பள்ளிப் பருவத்தில்
பென்சில் முனை ஒடித்த பையனுடன்
போட்ட சண்டைக்காட்சிகள்..
..
மிரண்டபடி..
மழலையர் வகுப்பில்
அம்மாவின் சேலை தலைப்பை பிடித்தபடி
நுழைந்த காட்சிகள்..
..என்று..

பல காட்சிகளை
ஓவியமாய் தீட்டி வைத்து..
மனதின் அலமாரிகளில்
அடுக்கி வைத்து
கேட்கும் போதெல்லாம்
வண்ண திரையில்
எனக்கு காட்டுபவன்
யார்..?
நினைத்தவுடன்..
நினைவுச் சங்கிலி அறுந்து விடுகிறது..
அப்போதைக்கு!..

ஆனால் ..
இந்தப் பயணத்தில்..
நினைவுகளின் மேல்
நம்பிக்கை இல்லாததால்
என் கையில்.. உன் ஓவியம்..
எப்போதும் ..என்னோடு..!

எழுதியவர் : கருணா (19-May-15, 2:56 pm)
Tanglish : ninaivuch chankili
பார்வை : 256

மேலே