அமில ஓலம்

வயிற்றில் எழுந்த
அமில ஓலம்
பலர் வாய்கள்
சிதறிய வசவு ஓலங்களையும்
வறட்டு கௌரவத்தையும்
கரைத்து,
யாரோ வீசிச் சென்ற
ஊசிப் போன சோற்றை
தண்டவாளத்தை விருந்து மேடையாக்கி
நாக்கை ருசிக்க ஆணையிட்டது!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-May-15, 1:42 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : amila olam
பார்வை : 70

மேலே