உன் கண்கள் அறியும்

உன் கண்கள்
அறியும்
எந்தன் கண்ணீரின்
சோகங்களை.....
உதிர்ந்து
போகும்
பூக்கள்
அல்ல....உன்
நினைவு.....உலகே
அழிந்தாலும்
அழியா நினைவு
இது.....

உன் வாழ்க்கை
உன்
கையில் இது
உலகறிந்த
மெய்.....உணர்சிகளை
உதறி விட்டு
உன்னை
நினைக்கும்
உடன் பிறப்புகளின்
உணர்வுகளிற்கு
உண்மையாய்
இருந்து
நேசி.....

காலம்
இட்ட
கட்டளை என்று
ஓலமிட்டு
நீயும்
காலங்களை
கரு அறுக்காதே....

பத்து மாதம்
சுமப்பவள்
மட்டும்
தாய் அல்ல.....
அவள் போகும்
வரை
உன்னை சுமப்பவள்.....
பெற்றோரை
காயப்படுத்தி
காலங்களை
நாசப்படுத்தி
நாட்களை
நகர்த்துவது
நரகத்து
வாழ்க்கையே......

அழகான
வாழ்வில்
நிமிஷங்கள்
வீணாவது
வீணே.....இனியாவது
இனிமையாய்
இந்த வாழ்வை
வாழ்ந்து
போவேன்.....

எழுதியவர் : thampu (19-May-15, 2:29 pm)
Tanglish : un kangal ariyum
பார்வை : 157

மேலே