எனக்கு நீ எதற்கு
உன் உதடுகளுக்கு தெரியாமல்
உன்னோடு உரையாட வேண்டும்.
உன் கவிதை பேசும் கண்களுக்கு தெரியாமல்
உன்னோடு கதை பேச வேண்டும்.
உன் உள்ளங்கையில் முகம் புதைத்து
உருகி உருகி அழ வேண்டும்.
அழுது அழுது ஓய்ந்த பின்பு
எழ வேண்டும் முன்னிலும் வேகமாய்
என்னை ஏளனம் செய்தவரை
எதிர் நின்று விரட்ட....