வலி வாழ்க்கை

கருவறையை கிழித்து வெளிச்சம் காண அன்னைக்கு பிறப்பென்னும் வலி...
கண்டதனைத்தும் விரும்பி உரிமை கொள்ள தந்தைக்கு இயலாமை ஏழ்மை வலி,
பாடங்கள் பயின்று பகுத்தறிவு புகட்ட ஆசானுக்கு கல்வியெனும் கலை வலி,
நினைவுகளை விதைத்து, மகிழ்வுகள் மலர நண்பனுக்கு நீங்காத நட்பு வலி,
உணர்வுகளை உரமாக்கி, உன்னதமெனும் உலகம் உணர துணைவிக்கு காலம் முழுதும் காதல் வலி, வலிகளின்றியேது வாழ்க்கை -
வலி வலியெனும் வழிகளினிலே,
வாழ்ந்து காட்டிட ,
வந்து சேர்ந்திடுமே வெற்றியெனும் வலி...!

எழுதியவர் : பாலகுமார் (20-May-15, 4:13 pm)
சேர்த்தது : பாலகுமார்
Tanglish : vali vaazhkkai
பார்வை : 120

மேலே