பார்க்கும் பார்வையில்

இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது. இன்னும் இந்த கீதாவை காணவில்லை. எரிச்சல் அதிகமானது விமலாவுக்கு. “இவ எப்போதும் இப்படிதான், சொன்ன நேரத்துக்கு வந்து சேரனும்னு தோனல போல” என புலம்பிக் கொண்டிருந்தாள். ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்ததால் தான் இவ்வளவு கோபம் விமலாவுக்கு. சிறு வயது தோழி என்பதனால் கீதாவை ரொம்ப திட்டித் தீர்க்கவும் அவளுக்கு மனம் இல்லை.
இரண்டு மணி நேரம் கழித்து, வாடகை கார் ஒன்று வந்து நின்றது. அமைதியான அந்த பூங்காவை காரின் சத்தம் கலைத்தது. காரில் இருந்து இறங்கியது கீதா தான். காரிலிருந்து இறங்கி, கட்டணத்தை கார் ஓட்டுனரிடம் கொடுத்து விட்டு விமலாவை நோக்கிச் சென்றாள்.
அருகில் சென்றதும் "சோரி விமலா... வர்ர வழியில கொஞ்சம் அவசர வேல அதான் லேட்டு...மன்னிச்சுடு" கெஞ்சினாள் கீதா. என்னத்தான் கோபம் இருந்தாலும், இரண்டு வருடம் கழித்து பார்த்த தோழியை கடிந்து கொள்ள முடியமால் சிறு புன்முருவளுடன் மன்னித்தாள் அவள்.
" உனக்காக காத்திருந்து எனக்கு கால் வழியே வந்திருச்சுடி, லேட் ஆகும்ன போன்ல சொல்லியிருக்க வேண்டிதானே. நீ வந்து காத்திருப்பேனு நான் எவ்வளவு வேகமா கார்ல வந்தேன் தெரியுமா? வர்ர வழியிலே ஒரு ஆக்சீடண்ட் ஆச்சு. அப்ப கூட நிற்காம வந்துட்டேன்." என மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் விமலா.
கொஞ்சம் பொருந்து, கீதா " நீ செய்த தப்ப சரி பண்ணிட்டு வரதான் லேட் ஆச்சு" என கூறினாள். அதை கேட்டு திடுக்கிட்ட விமலா " என்னடி சொல்ற நான் செய்த தப்பா? நான் ஊர்ல இருந்து வந்து நாலு மணி நேரம் தான் ஆகுது, அதற்குள்ள தப்பா? என்ன உளர கீதா? வீட்டுக்கு போய் திங்ஷ் எல்லாம் வெச்சுட்டு, நேர இங்கே வந்துட்டேன். இந்த கொஞ்ச நேரத்துல என்ன தப்ப நான் செஞ்சிருக்க முடியும். விளையடாதேடி" புருவத்தை உயர்த்தினாள்.
ஆழ்ந்த பெருமூச்சி விட்டு " நீ அவசரம வரப்ப ஆக்சிடெண்ட்னு சொன்னீயே. அதான் நீ செய்த தப்பு" என்றாள் கீதா. " ஓவ் அதுவா? என் தப்பு இல்ல. அந்த நாய்தான் குறுக்க வந்திருச்சி. அய்யோ அதப்பத்தி பேசி நேரத்தை வீண் பண்ணாத. ஒரு நாய்க்காக இவ்ளோ வாதடரியே. ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிர எங்கிட்ட இப்படிதான் விசாரனை நடத்தனுமா? பிலிஸ், ஃபொர்கெட் இட். உன்ன பார்க்க நான் எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா." என முடித்தாள்.
கீதா விமலாவின் பொறுப்பற்ற பேச்சை கேட்டு மனம் வருந்தினாள். அவளை எப்படியாவது பிற உயிர் மீது அக்கறை செலுத்தும்படி செய்ய வேண்டும் எனும் எண்ணம் அவளுள் உதித்தது. " விமலா நீ மோதி தள்ளிய நாயை, உன் கார் பின்னால் வந்துக் கொண்டிருந்த நான் தான் மருத்துவமனையில் சேர்த்தேன். ஒரு பிராணி என்பதனால் தான் உனக்கு இவ்வளவு அலட்சியம். அதே சமயம் நான் உன் கார்ல அடி பட்டிருந்தா இப்படிதான் விட்டு செல்வாயா? " என முடித்தாள் கீதா.
விமலாவிற்கு முள் தைத்தது போல இருந்தது. " நீயும் அந்த நாயும் ஒன்னா? என்னடி இப்படி பேசர." என தன் தவிப்பை உரைத்தாள் விமலா. "ஆமா, உனக்கு நெருக்கமானவர் ஒருவர் என்று சொன்னதற்கே இப்படி தவிக்கிறாய். அதன் உயிரும் இந்த பூமியில் ஒன்றுதானே. அத எப்படி நீ மறந்தே? தன் உயிரை போல மண் உயிரையும் மதிக்க வேண்டும் என்ற உண்மை உனக்கு தெரியலையா? இல்ல நீ தெரிஞ்சிக்க முயற்சிக்கலையா?" என்றாள் கீதா.
தன் தவற்றை எண்ணி மனம் திருந்தினாள் விமலா. தான் செய்த குற்றத்தை யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணமே இதற்க்கு காரணம் என்பதையும் அறிந்தாள். தண்டனை என்பது இருந்தால் மட்டுமே நாம் தவறை உணர வேண்டும் என்ற கருத்து எப்பேர்பட்ட அநீதி என்பதையும் அவள் அறிய தவரவில்லை. இது போல் பொறுப்பற்று வாகனம் செலுத்த கூடாது என்றும் உறுதி பூண்டாள். செய்த தவறுக்கு கீதாவிடம் மன்னிப்பும் கேட்டாள். அப்போதுதான் கீதாவின் மனம் அமைதி கொண்டது. இனி இது போல் அனாவசிய விபத்து மற்றும் கொலை தன் தோழி மூலம் ஏற்படாது என்பது உறுதி என்று எண்ணி மகிழ்ந்தாள்.
இவ்வுலகின் அனைத்து உயிரின் மதிப்பு ஒன்றுதான் எனும் எண்ணம் எல்லோரிடமும் இருந்தால், பல உயிர்கள் வீணே அழியாது. தவறு என்பதை உணரும் தருணம் எற்ப்படும் போது எதிர்கால குற்றங்கள் குறைகிறது என்பது யாவரும் அறிந்த உண்மையே.

எழுதியவர் : முச தாமரை (21-May-15, 10:35 am)
சேர்த்தது : தாமரை
Tanglish : paarkum paarvaiyil
பார்வை : 546

மேலே