நெசமா நெசமில்லை

“நெசமா நெசமில்லை”
கதா பத்திரங்கள்:-
கதை: நெசமா நெசமில்லை
அப்பா : கந்தசாமி
அம்மா :வள்ளி
வாலிப சினேகிதன்:சண்முகம்
மகன் : செந்தில்
மகள் : ஐஸ்வர்யா
கதை ஆசிரியர் :நா ராஜராஜன்

ஒரு நடுத்தர வீட்டில் கந்தசாமி(அப்பா),வள்ளி(அம்மா),செந்தில்(மகன்), ஐஸ்வர்யா (மகள்) என அழகான குடும்பம் வாழ்க்கை நடத்தி வந்தது.கந்தசாமி கோவக்காரர் எல்லோரிடத்திலும் கோவமாக நடந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் தேவை இல்லாத கடும் சொற்களை கொண்டு திடவும் செய்வார்.
அவருடைய மனைவியான வள்ளியுடனும் கிட்டத்தட்ட “இருபது வருடங்கள்” பேசாமலேயே வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் என்பதும் குறிபிடத் தக்கது.

அவரது மனைவியை கண்டாலே அவருக்கு பிடிக்காதாம் ஆனால் அவருடைய மனைவி எல்லா துன்பங்களையும் வாங்கிகொண்டு அவருக்கு சேவை செய்து வந்துள்ளாள்.

ஒரு நாள் அவருடைய வாலிப சிநேகிதன் சண்முகம் ரொம்ப நாள் கழித்து வெளியூரிலிருந்து வந்திருப்பதை அறிந்த கந்தசாமி அவரை பார்க்க எப்போதும் சந்திக்கும் இடமான வடபழனி கோவில் அருகே வர சொல்ல அவரும் வந்தார்.இருவரும் தங்களது நட்பை பகிர்ந்து கொண்டதோடு பேச ஆரம்பித்தார்கள்.

கந்தசாமி: கூட்டாளி என்று ஆசையோடு சண்முகத்திடம்... டேய் இவ்வளவு நாளாய் எங்க போயிருந்தடா.

சண்முகம்: கூட்டாளி என்று செல்லமாய்... இல்லடா பெங்களூர் ல செட்டில் ஆயிடண்டா

கந்தசாமி : எங்கிட்ட கூட ஒரு வார்த்த சொல்லாம போய்ட்ட

சண்முகம் :உனக்குதான் என் குடும்பத்த பத்தி தெரியுமே டா

கந்தசாமி:சரி சரி அத விடுடா இப்ப எப்படி இருக்க கல்யாணம் ஆயிடுச்சா எத்தன பசங்க ன்னு கேக்க சண்முகம் கண்ணில் கண்ணீர் வடிந்தது. உடனே கந்தசாமி சாரி டா கூட்டாளி எதாவது தப்பா கேட்டனா டா ன்னு சொல்ல சண்முகம் உடனே அது பெரிய கதைடா ன்னு சொல்ல மௌனத்துடன் இருவரும் நடந்தனர்.

சண்முகம்: நறைய இழந்தாச்சு கூட்டாளி ன்னு சொல்லி ...சண்முகம் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.நான் எங்க குடும்பத்துக்கு பயந்து ஊற விட்டு போக பெங்களூரில் ஒரு புரோட்டா கடையில தான் வேலை பாத்தன் அப்பறம் ஒரு வழியா ஒரு பெட்ரோல் பேங்குல வேல கெடைச்சது. அங்க ஒரு பெண் வந்து என்னோட பெட்ரோல் பேங்குல வேல பாத்தா அவளுக்கு வயசு கொஞ்சம் கம்மி எங்கிட்ட பேச பயந்த அவ எனோட கதைய கேட்டு தினமும் எனக்கு சாப்பாடு எடுத்து வந்தா எனக்கும் அவளுடைய நட்பு பிடித்தது நட்பு கொஞ்ச நாளில் காதலாய் மாறி கருவாய் முளைத்தது. அவள் வீடிற்கு ஒரே பெண் அவள் இப்படி செய்ததை பார்த்து அவள் அப்பா அவளை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விட்டார்.அன்று இரவே அவளுடைய அப்பா ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடபதாக செய்தி வந்தது.அவள் அழுதாள் என்னால் பொருதுகொல்லவே முடியவில்லை எனக்கும் அழுகை வந்தது.உடனே சடங்குகளை முடித்து விட்டு ஒரு ஐந்து வருடம் அவள் வீட்டிலே குடும்பம் நடத்தினோம் அவள் அப்பாவின் பாவம் என் பிள்ளையை பலி வாங்கியது.அந்த அதிர்ச்சியில் அவளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.அவள் மிகவும் பாவம் டா அவளுக்காக நான் எதுமே செஞ்சது இல்ல டா அவலும் நானும் இப்போ திருச்சியில் தான் வாழ்றோம்.எனக்காக அவ எல்லாத்தையும் இழந்ததுதான் மிச்சம் டா அவ பாவண்டா ன்னு சொல்லி இன்னும் எங்களுக்கு குழந்தை இல்லடா ன்னு சொல்லி அழுதார் சண்முகம்.இன்னைக்கு அவளுக்கு பிறந்த நாள் அவளுக்கு அர்ச்சன பண்ணதான் கோவிலுக்கு வந்தன் சொல்லி கந்தசாமியை பத்தி கேட்டார் சண்முகம்.
கந்தசாமி அவரை பத்தி சொல்லாமல் சரிடா நான் வாறேன் ன்னு சொல்லி கிளம்பி விட்டார்.

அன்று இரவு:

சண்முகத்தின் வாழ்கையில் நடந்த விஷயம் இவரை மிகவும் பாதித்தது அவர் சிரித்து பேசியதையும் அழுது புலம்பியதையும் நினைத்து நினைத்து மனம் உடைந்து போனார். சற்று நேரம் கண் மூடி தன் மனைவியை நினைத்து பார்க்க இறந்து போனார் கந்தசாமி உடனே தன் கண் முன் பார்த்தால் தன் மனைவி மற்றும் மக்கள் அழுது புலம்புகின்றனர்.என்னங்க என்னங்க என்று அவர் மனைவி குரலும் அப்பா அப்பா என்று அவர் பிள்ளைகள் குரலும் கேட்க கேட்க அவரால் துக்கத்தை தாங்கி கொள்ளவே முடியவில்லை அருகில் இருந்த கால தேவனிடம் எனக்கு ஒரு நாள் கொடுங்கள் என் மனைவிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு வந்து விடுகிறேன் என்று அழுது புலன்ம்புகிறார் கந்தசாமி.அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.என் மனைவியிடம் ஒரு நாள் கூட அன்பாய் பேசியதில்லையே இனி எப்போது பேச போகிறேன் என்று தெரியவில்லை என்று புரண்டு படுத்தார் கந்தசாமி உடனே எழுந்து கண்ணை துடைத்து பார்த்தால் கண்டது நெசமா நெசமில்லை கனவு என்று எண்ணினார்.உடனே தன் மனைவியை அழைத்து மன்னிப்பு கேட்டார் கந்தசாமி அதை கண்ட அவரது மனைவி வள்ளி அச்சிரியமடைந்தாள்.அவரது பிள்ளைகளை பார்த்து அன்புடம் அழைத்து பேசினார் கந்தசாமி.இதை கண்ட சண்முகம் அவரை பார்த்து நான் கேட்ட கேல்ல்விக்கு பதில் இதுதானா என்றார் சண்முகம்.
-அன்பாய் இரு

எழுதியவர் : நா ராஜராஜன் (22-May-15, 10:11 am)
பார்வை : 323

மேலே