திக் திக்கினு ஒரு கதை

அதிகாலை மொபைல் சிணுங்கியது.
முனகல் மூலையை பதம்பார்கவே,
கனி கண் விழித்தாள்.
அருகில் இருந்த கவினை தட்டி எழுப்பினாள்.
மொபைலை வாங்கி யாரது என்றான்?
மறுமுனையில் வந்த செய்தி மதி கலக்கியது.
கண்கள் குளமாகி, கரை தாண்டுமுன்,
காலைத் துண்டித்தான்.
என்னாச்சு கவின்?
கனி எங்க அம்மா கீழே விழுந்து விட்டாளாம்,
தலையில் பலமான அடிபட்டு கிடக்கிரளாம்.
என்றான் கவின் தழு தழுத்த குரலில்.
லேசர் கடிகாரத்தை சுண்டி விட்டாள்,
அது 4:30 மணி என்று கூவியபடி எதிர் சுவற்றில்
வட்டமிட்டு மறைந்தது.
விடிந்த பிறகு பேசலாம் கவினென்று போர்வைக்குள்
புகுந்தாள்.
பணக்கார மனைவியின் உத்தரவை மீற முடியாமல்
இவனும் படுக்கையில் சுருங்கினான்.
விடிந்தது!
கனி என்ன செயலாம்?
அவங்க ஆடிய ஆட்டத்திருக்கு இதுவும் வேணும்,
இன்னும் வேணுமென்றாள்.
மேலும், திருமணமாகி இந்த நான்கு வருசத்துல,
இந்த ஒரு வருஷமாத்தான் நிம்மதியா இருக்கோம்,
அது பொருக்காம உங்க ஆச அம்மா நாடகம்
போடுறாங்கன்னு நெனைக்கிறேன் என்று முடித்தாள்.
இருக்காது கனி,
அப்பா இல்லாம என்னை தன் இமைக்குள்ள வச்சு வளர்த்தா,
என் சந்தோசம் தான் முக்கியம் என்று பிரிந்து சென்றவள்.
நீ சொன்னபடி அவளை சொகுசு முதியோர் இல்லத்தில்
சேர்த்தேன். அது முதல் பேச்சு வார்த்தை கூட இல்லை,
தெரியுமா?
கடு கடு முகத்தோடு கனி, சரி செல்லாம்,
ஆனால் இன்றிரவே வீடு வந்தாகவேண்டும்
என்று உத்தரவிட்டாள்.
கவின், கனியின் தொழிற்ச்சாலைக்கு கனியோடு
சென்றான். வேலை முடித்து, சொகுசு காரில் புறப்பட்டனர்.
நெடுந்தூரப் பயணம்,
புல்லெட் போல் கார் பறந்து சென்றது.
இரவு ஏழு மணிக்கு முதியோர்
இல்லம் அடைந்தனர். படுக்கையிலிருந்த தாயின் கையை
பற்றினான். தாரை தாரையாய் கண்ணீர் விட்டபடி பேசலானாள்.
எத்தனை முறையடா, போன் செய்வது,
ஒரு வார்த்தை கூட பேச முடியாதா?
என் ஆசை அனைத்தையும் உனக்காக இழந்தேன்.
நீ வாழ நான் ஓடாய் தேய்ந்தேன்.
உன்னை பார்க்கவே உயிர்
ஒட்டி இருப்பது உனக்கு புரியாதா? என்றாள்.
இத்தனை வருடம் உன்னோடு ஏழ்மை
வாழ்க்கை வாழ்தாகிற்று,
இனிமேலும் உனக்காக இந்த சொகுசு
வாழ்க்கையை விடவும் முடியாது,
என்னை பார்த்தாலே போதும், உயிர் நீங்கி விடும்
என்று வசனமெல்லாம் இன்றைய காலகட்டத்திருக்கு
சரிவராது அம்மா என்றவுடன்,
அம்மாளின் முகம் சிவந்து,
கண்களில் கொதிப்பை காட்டியபடி கல்லாகின.
கைகள் இறுக்கின,
வலி தாங்காமல்,
அம்மா, அம்மா என்று கதறினான்.
தூரத்திலிருந்து எட்டிப் பார்த்த கனி,
சனியன் தொலைந்தது என்று மனதிற்குள்
புன்னகித்தாள்.
சுற்றியிருந்த ஆதறவற்ற முதியோர்கள்
ஒப்பாரி வைத்தனர்.
எப்படியோ சமாளித்து,
கைகளை விடுவித்து,
கனி சொன்னதுபோல், இல்லத்தாரே காரியம்
செய்து முடிக்க, பணம் கொடுத்து
கிளம்பினர்.
இரவு ஒன்பது மணி.
காரை கிளப்பினர்.
இடியோடு மழை தன் வெறுப்பை உமிழ்ந்தது.
தன்னையும் அறியாமல்
கவினின் கண்கள் நீர் சொரிந்தது.
கவனித்த கனி, காரை நட்சத்திர ஹோட்டலுக்கு
விடச் சொன்னாள்.
சென்றவுடன், பாருக்குள் புகுந்தனர்.
கவினை அளவாக குடிக்கவிட்டு,
கனி, கவின்னுக்கு ஒரு மணி நேரம்,
தலையணை மந்திரம் ஓதிவிட்டு,
இருவரும் தெளிவான பின்
பிரயாணத்தை தொடங்கினர்.
மணி 11.
மழை இன்னும் பேய்கிறது.
காரில் காதல் கீதங்கள் இசைக்கவிட்டு
மிதந்து சென்றனர் தார் சாலையிலே.
ஊர் எல்லை தாண்டியவுடன்,
டமார்! டபக்! டபக்! டபக்!
என்று ஏதோ ஒன்றில் ஏறி,
குதித்து இறங்கி,
மீண்டும், டபக்! டபக்! டபக்!
என்று குதித்து குலுங்கி
நின்றது.
கவின் இறங்கி பார்த்தால்,
இரு சக்கர டயர்களும் பிளந்து
கிடந்தது.
இருவரும் யோசித்த பிறகு,
கவின் ஊருக்குள் சென்று உதவிக்கு ஆள்
அழைத்துவர முடிவு செய்தனர்.
கனி காரில் இருந்தாள்.
மழை துளிகள் காரில் விழும் சத்தம்,
கனியை பயப்படச் செய்தது.
மணியோ 12.
லேசாக எங்கோ இருந்து ஒரு பெண்ணின்
அழு குரல் கேட்டது.
யாரது?
யாரது?
என்று உள்ளுக்குள் இருந்தபடி
கனி கேட்கிறாள்.
பதிலில்லை.
அழு குரல் சத்தமாகிறது,
எங்கோ கேட்ட குரலாய் தோன்டிற்று.
ம்ம்ம்...... புரிந்து விட்டது, இது கவினின் அம்மாளின்
குரல் தான் என்று அறிந்த மறுகணம்,
நிசப்த்தம்!!!
உடல் நடுங்கி உறைந்து விட்டாள், கனி.
நேரமோ 12 15!
கவின் என்னவானான் என்றும் தெரியவில்லை.
உதறலில் இருந்து விடுபட, கண்களை இறுக்க மூடினாள்,
மூடியபடியே வெகுநேரம் இருந்தாள், பின்பு
அசதியில் தூங்கி விட்டாள்.
மயான அமைதி.
எங்கோ ஒரு ஆந்தையின் குரல் கேட்கிறது.
கூ! கூ! சிக்கு புக்கு! சிக்கு புக்கு!
உஷ்! உஷ்! என்று ஏதோ
கடந்து போக,
துள்ளிக் கொண்டு எழுந்தாள்.
மணி 1 30.
கவின் போதையில் எங்கோ விழுந்து விட்டான்
என்று உறுதியாய் நம்பினாள்.
விடியும் வரை காருக்குள் இருப்பதே
உன்னதம் என்று நினைத்தாள்.
முன் சீட்டில் இருந்து, பின் சீட் வந்து
படுக்க நினைத்த போது, ரியர் கண்ணாடியில்
மங்கலாக ஒரு உருவம் தென்பட்டது.
கருப்பு நிற கோட், சூட் அணிந்தபடி,
நிதான நடையோடு, மழையில் நனைந்தபடி
வருகிறது.
உற்று உற்று பார்க்கிறாள்,
உருவம் பெரிதாக தெரிகிறது,
நடையின் வேகமும் கூடியது,
காரை நோக்கியே வருகிறது,
நடந்து வருவது ஒரு பெண், ஆம்!
தலை விரி கோலத்தில் ஆவேசமாக
வருகிறது...!
ஒரு கையில் ரத்தம் சொட்டும் அறுவாள்,
மறுகையில் ஏதோ வைத்திருக்கிறது.
உன்னைக் கொள்ளவே வருகிறேன்,
ஆ! ஆ! என்று அலறியபடி ஓடி வருகிறது.
பதற்றம், பதற்றம்...!
நடுக்கம் நடுக்கம்...
கண்கள் சிவக்கிறது,
தன்னையும் அறியாமல் காப்பற்றுங்கள்
என்று கத்தினாள்.
நான்கு கதவுகளையும் தாழிட்டுக் கொண்டாள்.
இன்னும் வேகமாக வருகிறது,
தன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
பிரணயாம செய்து விட்டு,
திரும்பிப் பார்க்கிறாள்....!
யாருமில்லை,
நல்லாப் பக்கமும் பார்க்கிறாள்....
எதுவும் தென்படவில்லை.
புரிந்துவிட்டது...!
இது வெறும் மனப் பிராந்தியே என்று.
லேசாக சிரிக்க தோன்றியது கனிக்கு..
வாய்விட்டு சிரிக்கிறாள்..
சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறாள்,
சிரிப்பு சத்தம் அதிகரித்தது,
கூடவே இன்னொருவர் சிரிப்பு சத்தமும் கேட்க,
கனி நிறுத்திவிட்டாள்!
இவளின் புறம் ஏதோ ஒரு உருவம்
நிற்பதாய் உணர்ந்தாள்.
சட்டென்று திரும்பினாள்,
அதே கோட் சூட் அணிந்த பெண்,
வேறு யாருமில்லை கவினின் அம்மாவே தான்.
ஒரு கையில் அருவாள்,
மறுகையிலோ கவினின் கொய்த
தலை ரத்தம் சொட்டியபடி...!
ஊ!
ஓ!
ஆ! என்று அலற ஆரம்பித்தாள் கனி.
வெறி பிடித்த அம்மாள் தலையை கிழே போட்டு,
கதவை திறக்க முனைதாள்,
கதவு திறந்த பாடில்லை,
மறு கதவை திறக்க முற்படுகிறாள் முடியவில்லை.
ஆத்திரம் கொண்டு அறுவாளால் ஓங்கி
கண்ணாடியை அடித்தாள்,
நொறுங்க வில்லை....!
மறுபுறம் ஓடினாள்,
ஒரு கதவு தட்டியபடி இழுத்தாள்,
அதே கதி தான்.
உள்ளே இருந்த கனி,
மீனைப் போல் துடித்தாள்,
ஐயோ!
ஐயோ! என்று அலறுகிறாள்..
இப்போது கடைசியாக வலது புறக் கதைவை
இழுத்தாள் வந்தபாடில்லை.
லேசாக பெருமூச்சு விட்டாள் கனி.
இதைப் பார்த்து, கவினின் அம்மா சிரிக்கிறாள்,
சிரிக்கிறாள் , பலமாக சிரிக்கிறாள்...
கனிக்கு புரியவில்லை..
சிரிப்பை நிறுத்தாமல்,
கோட் பாக்கெட்டில் கைவிட்டு,
கார் சாவியை எடுத்து காட்டி,
வே! வென சிரித்தாள்.
கனி, துள்ளித் துடித்து,
உதறலோடு, இடது கதவை தடவி
தடவி, லாக்கை கழட்டி விட்டு,
கதவைத் திருந்தாள்...
இதைப் பார்த்த அம்மாள்,
காரைச் சுற்றி ஓடி வருகிறாள்
இவளைக் கொன்றுவிட...
கனியோ, மின்னலாய் சீறி,
வெளியே குதித்து,
ஓடுகிறாள்.
பிரகாசமான ஒரு ஒளி,
விஸ்வரூபம் மெடுத்து வீசியது,
மேலும் பெரிதாகிறது,
கண்கள் கூசி
இப்போது எதுவேமே தெரியவில்லை.
கூ! கூ! வென்று காதைப்
பிளக்கும் சத்தமொன்று சித்தத்தை கலக்கியது.
கை கால்களும்,
உடலும் தட தடத்தது...
மறு நொடியே,
தூக்கி எறியப் பட்டாள்.......!