கலாச்சாரம்

பேட்டி எடுக்க வந்த பத்திரிக்கைகாரர்கள் கல்லூரிக்குள் நுழைந்ததும் வாட்ச்மேன் ஓடிவந்து நீங்க யாரு, என்ன வேண்டும்? என்று கேட்டதும் நாங்கள் பத்திரிக்கைக்காரர்கள் இந்த கல்லூரியில் பல்கலைகழகத்திலியே முதல் ரேங் எடுத்த கலாங்கர பெண்ணை பேட்டி எடுக்க வந்திருக்கோம் என்று சொல்லிவிட்டு ப்ரின்சிபால் அறை எங்கிருக்கு? என்று விசாரித்தார்கள். வலது பக்கம் என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு திரும்பினார் வாட்ச்மேன்.

பத்திரிக்கைக்காரர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்து ப்ரின்சிபால் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். ஏய் ராகவ்! இன்னைக்கு கல்லூரி விடுமுறையோ? ஏன் அப்படி சொல்ற? இல்ல.. அங்க பாரேன் புடவையும், வேஷ்டியுமாக கட்டிக்கொண்டு மரத்தை நட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நான் உள்ளே வந்ததிலிருந்து ஒரு சுடிதார் போட்ட பெண்ணைக்கூட பார்க்கமுடியவில்லை என்று சினுங்கினான் மணி. சந்தேகம் என்றவுடன் கேட்டு விட வேண்டியதுதான் என்றான் ராகவ். என்னங்க ஒரு நிமிஷம் என்றவுடன் சேலையை சரி செய்தபடி ஒருபெண் அருகில் வந்தாள். இன்னைக்கு கல்லூரி இல்லைங்களா ஏதாவது மரம் நடுவிழா கொண்டாட்டங்களா? என்று கேள்விகளை அடுக்கினான் ராகவ் இல்லையே! நாங்க எல்லாம் இந்த கல்லூரி ஸ்டூடெண்ட்ஸ் தான்; நாட்டுல வாகனங்கள் பெருகிவிட்டதால் நாம் சுத்தமான காற்றை சுவாசிப்பது இல்லை, அதுமட்டுமில்லாமல் குடியிருக்க வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டுவதற்காக மரங்கள் எல்லாம் காணாமல் போனதால் மழைவளம் குன்றி விவசாயம் செய்ய நீர் இல்லாமலும், ஏன் குடிநீருக்கே வழி இல்லாமல் திண்டாடிகொண்டிருக்கும் நம்மிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்ல காற்று மற்றும் தண்ணீர் பெற வேண்டும் எனும் நோக்கில் மரம் நடுவதெர்கென்று நிதமும் ஒரு மணி நேரம் ஒதுக்குறாங்க. அதான் மரங்களை நட்டுக்கொண்டும் செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து கொண்டும் இருக்கிறோம். ஓ! நல்ல விஷயம் தான் என்று தன் நோட்டில் குறிப்பு எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்கள். ப்ரின்சிபால் அறையை நெருங்கியதும் நான்கு பெண்கள் சுடிதார் போட்டுகொண்டு நின்று கொண்டிருந்தார்கள். ஏய்!! ராகவ் அங்க பாரு சுடிதார் போட்ட பெண்கள்டா என்று குசுகுசுத்தான். உஷ்ஷ்....என்ன சத்தம் என்று கேட்டுகொண்டே ராகவ் மற்றும் மணி அருகில் வந்தாள் பிரின்சிபால் உதவியாளர் ரதி; சாரி மேடம் நாங்க பத்திரிக்கைகாரர்கள் பிரின்சிபால பார்க்க வந்தோம் என்றனர். கொஞ்ச நேரம் சத்தம் போடாம அப்படி உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு அந்த பெண்கள் பக்கம் திரும்பி உங்கள மேடம் உள்ள வரச்சொல்றாங்க என்று அந்த பெண்களை பிரின்சிபால் அறைக்கு அனுப்பிவிட்டு தன் வேலையில் மூழ்கினாள் ரதி.

மூணு நாளா ஸ்ட்ரைக் பண்றீங்களாமே சுடிதார்தான் போடுவோம்னு. இப்படி நீங்க செய்றதுக்கு இது ஒண்ணு நீங்க கட்ன காலேஜ் இல்ல தவிர மேனஜ்மென்ட் என்ன சொல்லுதோ அது கண்டிப்பா பின்பற்றியாகனும். நாட்ல நடக்கிற பெண்கள் கொடுமைகள் எல்லாம் பார்த்துகிட்டு தானே இருக்கீங்க? மூன்று வயது குழந்தை, ஏன் பிணவறையில் பெண்கள் கிடந்தாலும் மானபங்க படுத்தப்படுகிறார்கள். தவறு செய்த ஆண்களை கேட்டால் பெண்களின் ஆடை குறைப்புதான் காரணம் என்கிறார்கள். சரி அதையெல்லாம் விடுங்க வெளிநாட்டு பெண்கள் காலமாறிபோச்சுன்னு வேற நாட்டு ஆடை அணிகிறார்களா அல்லது வேற நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களா இல்லையே. உலகத்திலேயே நம் நாட்டு மக்கள் மட்டும்தான் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதையே பெருமையாக நினைக்கிறார்கள்; நம் நாட்டு சேலைக்கு உள்ள பெருமை அவர்களுக்கு தெரிவதில்லை. ஏன் வேஷ்டி சேலை கட்டினால் படிப்பு ஏறாதா இல்லை சுடிதார் மற்றும் பாண்டுக்கு படிப்பவர்கள் கண்டிப்பாக அணியவேண்டும் என்று முத்திரை ஏதாவது உள்ளதா? நம் நாட்டு கலாச்சார ஆடைகளை வீடுகளிதான் அணிவதில்லை இந்த மாதிரி கல்லூரிகளுக்காவது கட்டிக்கிட்டு வந்து நம் கலாச்சாரத்தையும், நம்மையும் பாதுகாக்க பழகிக்கணும். சாரி மேடம் இனிமேல் நம் நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவதையே உயிர் மூச்சாக கொண்டிருப்போம்!!! என்று வகுப்புக்கு திரும்பினர் நால்வரும்.

ராகவும், மணியும் ப்ரின்சிபால்கிட்ட அனுமதி பெற்று கலாவிடம் பேட்டி எடுத்துக்கொண்டு இனிமேல் கலாச்சாரதுக்குன்னு நம் பத்திரிக்கையில் ஒரு பகுதியை ஒதுக்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கலாச்சாரம் செழிச்ச பூமியா நம்ம நாட்ட மாற்ற நாமும் பாடுபடணும் என்று சொல்லிக்கொண்டே கல்லூரியிலிருந்து வெளியேறினார்கள்.


நன்றி
திருமதி புவனாபாலா

எழுதியவர் : திருமதி புவனாபாலா (20-May-15, 11:56 am)
Tanglish : kalacharam
பார்வை : 610

மேலே