பொய்க் கோபம்
இரண்டு வயது சிறுவன்..
இமைகள் படபடக்க
எட்டிப் பார்க்கிறான்..
தெருவில்..
அப்பாவிடம் ..
கோபித்துக் கொண்டு
போன பாட்டி
வருகிறாளா என்று..
குழந்தையின் முத்தத்தின் ஈரம்
காய்வதற்குள் ..
இவனுக்காக வந்தேன் என்று
சொல்லியபடி உள்ளே நுழையும்
பாட்டியை..
"குடும்பத்தில் இதெல்லாம் சகஜமப்பா"
என்பது போல் பார்த்து ..
பொய்க் கோபத்துடன்..
பெரிய மனிதன் போல..
முகம் திருப்பிப் போகின்ற சிறுவனை..
முதுகில் அறைந்து ..
சிரித்து மகிழ்கிறாள்..
பாட்டி!