தனிமரம் - உதயா

பருவமடைந்த பத்தாவது நாளே
பரிசம் போடா வந்த மாமனுக்கு
மறு திங்களிலே மணசாதமிட்டனர்
என் தாய் தந்தையர்

காலனின் சூழ்ச்சியில்
அறு வருடத்திலே
பூவை இழந்தேன்
பொட்டை இழந்தேன்

எனக்கு வயதோ
பதினெட்டுதான்
நானும் இரு பிள்ளைகளை
ஈன்ற தாய்தான்

வாழ்கை எதுவென
புரியாத வயதிலே
வாழ்கையை தொலைத்து
வாடி நின்றேன்

நான் படிக்காத பட்டிக்காட்டு
சிரிக்கியென்பதாலோ என் வாழ்கை
ஈன்றவரின் அறியாமைக்கு பலியானதோயென
மனதில் வெடித்த தெரிப்புகளின் கூற்றுகல்

தெறிப்பில் சில வைராக்கியங்களும்
பொங்கி வளர்ந்தது உறவுகளிடம்
கையேந்தும் நிலைவிடுத்து பலர் வீட்டில் பாத்திரம்
தேய்தாவது என் மக்களே கரைசேர்ப்பேன்னென்று

வீட்டு வேலை செய்கையில்
என் முதுகின் எலும்பு
வில்லாய் வளைந்து முள்ளின்
முத்தமாய் சுகத்தை தந்தது

இடுப்பின் எலும்புகளோ
காய்ந்த மரப்பட்டயாய் மாறி
உதிர தொடக்கி
ஓய்வளிக்க துடித்தது

நான் ஓய்ந்தால் என் மக்களின்
வாழ்கையே அழிந்துவிடுமோயென
எண்ணியே ஓய்வை என் மனமும்
வெறுத்து மறுத்தது

பல நாட்களில்
என் பிள்ளைகளின் புசித்தலே
என் பசிக்கு
விருந்தாகியிருந்தது

வாழ்கையெனும் கடலில்
படகாய் மாறிதான்
என் மக்களை
கரையேற்றினேன்

கரையேறிய என் குஞ்சுகளே
கழுகாய் மாறி
என்னை நடுகடலில் மீண்டும்
தத்தளிக்க விட்டது

எமை வயிற்றில் சுமர்ந்தவரும்
நான் வயிற்றில் சுமர்ந்தவரும்
என்னை விரைவிலே துறக்க நினைத்து
வெறுத்தும் சென்றனர்

தனி மரமாய் வாழவே
வரம் பெற்றுயிருப்பேன்யென நினைக்கிறேன்
ஏனெனில் இன்னும் தனி பிணமாய்தான்
தொங்கிக்கொண்டிருக்கிறேன் அந்த மலையின் உச்சியில்

எழுதியவர் : udayakumar (21-May-15, 11:32 am)
பார்வை : 230

மேலே