கண நேரத்தில் முடிகிறது
ஏன்..?
எதற்காக..இப்படியெல்லாம்..?
என்ற கேள்விகளை
மனம் எழுப்பி விட்டு
குமுறி அழுகிறது..
பிறந்து வளர்ந்து ஆளாகி
பெரு வாழ்வு நடாத்தி..
ஒரு நாள் விடியலில்
அல்லது ஏதேனும் ஒரு நொடியில்..
கண நேரத்தில் ..
ஒருவன் உயிர் பறிக்கப் படுகிறது..
வேரோடு மரம் சாய்க்கப் படுகிறது..
காரணிகள்..?
சினம்..
தீராக்கோபம்..
மதத் துவேஷம்..
பிரிவினைகள்..
துரோகங்கள்..
தவறான புரிதல்கள்..
அழகிய வாழ்க்கைச் சோலையை
ஆழிப்பேரலை அடித்து செல்வது போல்
எல்லாம் முடிந்து விடுகிறது ..
சில கணங்களில்..
சில கொலைகளில்..
வன்முறைகளில்..
வன் கொடுமைகளில்..
இயற்கையின் விதிகளை
மீறிடும் செயல்களில்
தெரிகிறது..
விதி வலியது என்பதும் ..
மதி சிறியது என்பதும்!