பதில் மௌனமே

வெகு எளிதாய்
கூறிவிட்டு சென்று விட்டாய்
என்னை உனக்கு
பிடிக்கும் என்று....
இவள் மனமோ
ஒவ்வொரு நொடியும்
துடியாய் துடித்து
கொண்டிருக்கிறது ....
பதிலாய் நான் கூறும்
மௌனத்தை நீ எப்படி
எடுத்துக்கொள்ள போகிறாய் என்று...

எழுதியவர் : இந்திராணி (22-May-15, 3:05 pm)
Tanglish : pathil mowname
பார்வை : 109

மேலே