என் கவிதையாவது

இந்தக் கவிதையிலிருந்து....
இந்த வரியை நகர்த்தி விட வேண்டும்.

அது என் குற்றங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
உன் துரோகங்களை...
வாழ்வின் சிக்கலான கணிதத்தை...
சில குழப்பங்களை...
மன்னிப்ப்ற்ற வன்மத்தை...
நம்பிக்கையின் பேரிழப்பை..
வெற்றிடமாகும் என் இருப்பை...
மருந்தற்ற காயங்களை...
வெறுப்பின் வாதையை....
கோடையாகும் வாழ்வின் நிழலை...
எளிமையை வேட்டையாடும் விருப்பங்களை..
நீங்காத துயரங்களின் வாசனையை...
இணையவே முடியாத மனங்களை....

சொல்லிக் கொண்டிருக்கிறது...

நகர்த்திவிட வேண்டும் இந்த வரியை...
என் கவிதையிலிருந்து...

அன்பின் வரிகளாய் ஆர்ப்பரிப்பதாய்...
என் கவிதையாவது இருக்கட்டுமே.

எழுதியவர் : rameshalam (22-May-15, 6:42 pm)
பார்வை : 121

மேலே