வாட்டிடும் உன் ஞாபகங்கள்

வாட்டிடும் உன் ஞாபகங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வானமாய் நீ
வாட்டத்தில் நான்
தேடியே அலைகிறேன்
வையகம் பொழியுமா
என் நினைவுகள் என்று
தூரலாக நீ
மணலாக நான்
சேறாக உமிழ்கிறேன்
ஏக்கங்கள் தீர்க்குமா
என் கண்ணீர்த்துளிகள் என்று
வெண்மையாக நீ
வெறுமையில் நான்
ஊழலாக வெளுக்கிறேன்
உயிர் உனை கேட்குமா
என் கனவுகள் நீ என்று
விழிகளாக நீ
வியர்வையில் நான்
தாகமாக தவிக்கிறேன்
உள்ளம் எனை வாட்டுமா
என் நாணம் ஒளிந்ததோ என்று
நிலவாக நீ
தேய்பிறையில் நான்
நினைவாக உறைகிறேன்
உணர்வு எனை தீண்டிடுமா
என் உறவு நீதான் என்று
நிழலாக நீ
நிஜமாக நான்
தனிமையில் வாடுகிறேன்
பொழுதுகள் நமை கடந்திடுமா
என் கவிகள் மலர என்று
முதலாக நீ
முடிவாக நான்
முத்தங்களில் திருடுகிறேன்
கன்னங்கள் இழந்திடுமா
என் சத்தங்கள் கரைந்திடும் என்று
நானாக நீ
நீயாக நான்
கவியாக மாறுகிறேன்
எழுத்துக்கள் நமை ஏற்றிடுமா
என் காகிதங்கள் நிறைய என்று
வானமே
மனதினை
கட்டி அணைத்திடு -உனை
மழையாக தொட்டு ரசித்து காயங்களை ஆற்றிட ~~~~